வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (30/11/2018)

கடைசி தொடர்பு:17:57 (30/11/2018)

'சர்வம் தாள மயம்' சிங்கிள் ட்ராக் வெளியானது!  

ராஜிவ் மேனன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம், 'சர்வம் தாள மயம்'. இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் மியூசிக்கல் டிராமா படமான இதற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வினீத், அபர்ணா பாலமுரளி, டிடி, சாந்த தனஞ்செயன் போன்ற இயல்-இசை சம்பந்தப்பட்ட பிரபலங்கள் 'சர்வம் தாள மயம்' படத்தில் நடிக்கின்றனர். ராஜிவ் மேனனின் மனைவி லதா மேனன் இப்படத்தைத் தயாரிக்கிறார். ரவி யாதவ் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

ஏ ஆர் ரஹ்மான்

இப்படத்தின் 'சர்வம் தாள மயம்' எனும் சிங்கிள் டிராக் இன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி இதற்கு பாடல்வரிகள் எழுதியுள்ளார். ஹரிசரண் மற்றும் அர்ஜுன் சாண்டி இப்பாடலைப் பாடியுள்ளனர். வரும் டிசம்பர் 28-ம் தேதி, இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.