மதுரையில் நடைபெற்ற உணவு மற்றும் உணவுப் பதனீட்டு பொருள்களின் கண்காட்சி! | food exhibition in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (01/12/2018)

கடைசி தொடர்பு:01:00 (01/12/2018)

மதுரையில் நடைபெற்ற உணவு மற்றும் உணவுப் பதனீட்டு பொருள்களின் கண்காட்சி!

உணவு மற்றும் உணவுப் பதனீட்டு பொருள்களின் கண்காட்சி இன்று மதுரையில் தொடங்கியது. இதில் மதுரை மண்டலத்தைச் சேர்ந்த உணவுப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள், உணவுப்பொருள் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. தென்னிந்திய தொழில் வர்த்தக அமைப்பும், தமிழ்நாடு தொழில் வர்த்தக அமைப்பும் இணைந்து மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடத்தும் இந்தக் கண்காட்சியை இதயம் எண்ணெய் நிறுவனத்தின் நிர்வாகி வி.ஆர்.முத்து தொடங்கி வைத்தார். 

உணவுபொருள் கண்காட்சி

கண்காட்சி அரங்கில் பல்வேறு உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், சிறுதானிய உணவு வகை விற்பனையகங்கள், விவசாய உபகரணங்கள், கடைகள் அமைத்திருந்தனர். விவசாயப் பொருள்களை எந்த மாதிரி மதிப்புக் கூட்டி விற்பனை செய்யலாம் என்பது பற்றி விளக்கி கூறினார்கள். அலைபேசி மூலம் ஆர்டர் கொடுத்தால் இருக்கும் இடத்துக்கே குறைந்த செலவில் சாப்பாடு வழங்கும் `அட்சயபாத்திரா ஃபுட்ஸ்' என்ற நிறுவனத்தின் கடை, அனைவரையும் கவர்ந்தது.

இணையதள ஆர்டர் மூலம் பிரபல உணவகங்களில், உணவுகளைப் பெற்று சப்ளை செய்து வரும் மற்ற நிறுவனங்களை போலில்லாமல், தொழிற்சாலை அமைத்து வீட்டு சமையல் முறையில் உணவு தயாரித்து சுகாதாரமான முறையில் விலை குறைவாக வீட்டுக்கே தேடி வந்து உணவு தருவதுதான் இந்நிறுவனத்தின் சிறப்பு என்று அதன் நிர்வாகி கூறினார். இப்படி மாற்று முயற்சிகள் மூலம் உணவுப்பொருள் உற்பத்தி, உணவுப்பொருள் மதிப்புக்கூட்டல் மற்றும் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் செயல் விளக்க கடைகளை ஏராளமான மக்கள் பார்த்து வருகிறார்கள். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க