சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை | In 8 year old boy sexual harassment case, man got punishment

வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (01/12/2018)

கடைசி தொடர்பு:07:03 (01/12/2018)

சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

திருப்பூரில் 8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆட்டோ ஒட்டுநர்

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. 55 வயதான இவர் திருப்பூரில் தங்கி ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.  இவர், கடந்த 2014-ம் ஆண்டு திருப்பூர் யுனிவர்சல் திரையரங்கம் அருகே தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஒருவனை தன்னுடைய ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அணைக்காடு என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அங்கு வைத்து அச்சிறுவனிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார். இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அப்போது திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் ரவியை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்திருந்தனர். அந்த வழக்கானது திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அந்த வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதி, ``சிறுவனிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் ரவிக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, ரவியைக் கைது செய்த காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அவரை அடைத்தனர்.