வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (01/12/2018)

கடைசி தொடர்பு:19:00 (01/12/2018)

கர்நாடகா நிராகரித்தது, தமிழக அரசு கொடுக்குது! - தமிழக மாணவர்களுக்கு தரமற்ற சைக்கிள்கள்

”கர்நாடக அரசு, 'தரமில்லை' என்று நிராகரித்த சைக்கிள்களை வாங்கி, தமிழக மாணவர்களுக்கு அரசு கொடுக்கிறது” என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கர்நாடக அரசு

கர்நாடக முதல்வர் குமாரசாமி, அந்த மாநில பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்குவதற்கு தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தயாரித்து, மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சைக்கிள்கள் சில தினங்களிலேயே துருப்பிடிக்கத் தொடங்கின. மேலும், அந்த சைக்கிள்கள் தரமற்ற முறையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய தொகையையும் நிறுத்தச் சொன்னார் முதல்வர் குமாரசாமி. அத்துடன், அதற்குக் காரணமாக இருந்த அந்த மாநிலத்தின் கல்வித்துறை செயலர் ஷாலினி ரஜனீஷ் பணியிடை மாற்றமும் செய்யப்பட்டார். இதற்காக கர்நாடக அரசு ஒதுக்கீடு செய்த தொகை 185 கோடி ரூபாய். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமைதாங்கினார்.

சைக்கிள்கள்

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவ , மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார். தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட சைக்கிள்களின் முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்த கூடையில் கர்நாடக முத்திரை பதி்க்கப்பட்டிருந்ததோடு, கன்னட மொழியில் ”கர்நாடக அரசின் அரசு மாணவர்களுக்கான திட்டம்” என்றும் கன்னட மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.   

தமிழக அரசு

இந்நிலையில், ”கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு, தரமற்றவை என்று நிராகரிக்கப்பட்ட  சைக்கிள்களை  தமிழக அரசு  கர்நாடகாவில் இருந்து வாங்கி, தமிழகத்தில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அளித்திருக்கிறது. இதன்மூலம், பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது” என்று குற்றம் சாட்டுகின்றனர் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க