`நல்லது செஞ்சா நல்லது நடக்கும்’ - தலைமுடியைத் தானம் செய்த நித்யா பாலாஜி | bigg boss nithya balaji donates hair to cancer patients

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (01/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (01/12/2018)

`நல்லது செஞ்சா நல்லது நடக்கும்’ - தலைமுடியைத் தானம் செய்த நித்யா பாலாஜி

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்துவதற்காக, தனது தலைமுடியைத் தானமாகத் தந்துள்ளார், தாடி பாலாஜியின் மனைவி நித்யா பாலாஜி

நித்யா பாலாஜி

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோதெரபி சிகிச்சை எடுக்கிறபோது தலை முடி உதிர்ந்துவிடுகிறது. மறுபடியும் முடி வளராது என்பதால் இவர்கள் விக் வைத்தே நடமாட வேண்டியுள்ளது. இவர்களுக்கு விக் தயாரிப்பதற்கென்று தலைமுடியைத் தானமாகத் தர பலரும் முன்வருவர். நடிகர் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா சில மாதங்களுக்கு முன் தனது தலைமுடியைத் தானமாகத் தந்தார். அந்த வகையில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவியும் 'பிக் பாஸ்' ஷோவில் கலந்துகொண்டவருமான நித்யா தற்போது, தனது தலைமுடியைத் தானமாகத் தந்துள்ளார்.

நித்யாவிடம் பேசினோம். 'பிக்பாஸ்' ஷோ முடிஞ்சதுல இருந்து இந்த மாதிரி நல்ல விஷயங்கள்ல என்னோட கவனத்தை அதிக நேரம் செலுத்த முயற்சி செய்துட்டு வர்றேன். பாலாஜியுடன் பிரச்னை தீர்ந்தததுபோல பிக் பாஸ் கடைசி எபிசோடுல காட்டினாங்க. அப்பவே 'இன்னொரு நூறு நாள் பாலாஜி எப்படி நடந்துக்கறார்னு பார்த்துட்டு சேர்ந்து வாழறது பத்தி முடிவெடுக்கறேன்'னு சொன்னேன். இன்னும் அந்த நூறு நாள் முடியலை. நான் வெயிட் பண்றேன். கடந்த, நடந்த கசப்புகளை மறந்து மனசை டைவர்ட் செய்யவே இது போன்ற சோஷியல் ஆக்டிவிடீஸ். நாலு பேருக்கு நல்லது செய்தா நமக்கும் நல்லது நடக்குமில்லையா? பார்க்கலாம்' என்கிறார் நித்யா.