வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (02/12/2018)

கடைசி தொடர்பு:14:52 (02/12/2018)

படித்தது ப்ளஸ்2; வைத்தது கருக்கலைப்பு மையம்!- சிக்கிக்கொண்ட தி.மலை தம்பதி

திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த பெண் மற்றும் அவரது கணவரை அதிரடியாகக் கைது செய்துள்ளது போலீஸ்.

கருக்கலைப்பு


திருவண்ணாமலை பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தி (45). இவர் 12- ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்துள்ளார். இது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலம் மருத்துவ நலப்பணிகள் குழுவிற்கு புகார் சென்று உள்ளது. இந்த நிலையில் மருத்துவ நலப்பணிகள் குழுவினர்கள் கடந்த ஒரு வாரமாக அந்த வீட்டை மறைந்திருந்து கண்காணித்து வந்துள்ளனர். அங்குச் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்வது உறுதியானதும், மருத்துவக் குழுவினர் அந்த வீட்டிற்குள் நுழைந்து அதிரடி சோதனை போட்டனர். 

அப்போது அங்கு கருக்கலைப்பிற்கு பயன்படுத்தி வந்த ஸ்கேன் கருவி, ஊசிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை மருத்துவக்குழுவினர் பறிமுதல் செய்தனர். கருக்கலைப்பு செய்துவந்த ஆனந்தியையும் அவருக்கு உதவியாக இருந்த அவரது கணவர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும்  அந்த வீட்டிற்குச் சீல் வைத்தனர். இதே சட்டவிரோத கருக்கலைப்பு குற்றத்துக்காக 2016 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு ஒருமுறை என இரண்டுமுறை ஆனந்தியை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க