`ஆணவக்கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது’ - சகாயம் ஐஏஎஸ் திட்டவட்டம்! | `Can't Accept honour killing" says sagayam ias

வெளியிடப்பட்ட நேரம்: 00:02 (03/12/2018)

கடைசி தொடர்பு:10:11 (03/12/2018)

`ஆணவக்கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது’ - சகாயம் ஐஏஎஸ் திட்டவட்டம்!

'தீண்டாமை, நாட்டின் மிகப்பெரும் அவலம். ஆணவக்கொலைகளைக் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது' என சாகயம் ஐஏஎஸ் தெரிவித்தார்.

சகாயம்

மதுரை மாவட்ட 'மக்கள் பாதை இயக்கம்' நடத்தும் திடல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் நடந்த நிறைவு விழாவில்  ஐஏஎஸ் அதிகாரி சகாயம் பங்கேற்று, வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு  பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம், "மக்கள் பாதை அமைப்பு இயக்கமாக உள்ளது. இனிவரும் காலங்களில் பல்வேறு பரிமாணங்களை அடையும். சமுதாயத்திற்குத் தேவையான விசயங்களை முன்னெடுக்கும். தற்போது, ஏழை பணக்காரன், தமிழ்வழி படிப்பவர்கள், ஆங்கில வழிக்கல்வி படிப்பவர்கள் என இரு பெரும் சமுதாயங்கள் இந்தியாவில் உருவாகியுள்ளன. 

தமிழ்நாட்டைவிட படிப்பறிவில் குறைவாக இருக்கும் வட மாநிலங்களில்கூட, நடிகர்களுக்கு பாலாபிஷேகம் செய்வது கிடையாது, ஆனால் 80 சதவிகித கல்வி அறிவு அதிகம் உள்ள தமிழ்நாட்டில், தனிநபர்களுக்கு இதுபோன்ற சம்பவம் நடப்பது ஏற்புடையதல்ல. இளைஞர்களை விழிப்பு உணர்வுமூலம் மாற்ற வேண்டும். ஆணவக்கொலைகளை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு எங்கள் அமைப்பு தொடர்ந்து போராடும். தீண்டாமை, மிகப்பெரும் அவலம். படித்த நபர்கள் அதற்குப் பெரும் விழிப்பு உணர்வைக் கொண்டுவர வேண்டும். ஆணவக்கொலைகள் சமுதாயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல; இதை மாற்ற வேண்டும். மக்கள் இயக்கம் தொடர்ந்து விழிப்புஉணர்வை ஏற்படுத்தும்" என்றார்.