நாணயம் விகடன் பிசினஸ் ஃபைனான்ஸ் கான்க்ளேவ் - 'கோஃப்ரூகல்' குமார் வேம்பு சிறப்புரை | Nanayam Conclave: Kumar Vembu speech

வெளியிடப்பட்ட நேரம்: 11:29 (03/12/2018)

கடைசி தொடர்பு:11:29 (03/12/2018)

நாணயம் விகடன் பிசினஸ் ஃபைனான்ஸ் கான்க்ளேவ் - 'கோஃப்ரூகல்' குமார் வேம்பு சிறப்புரை

சென்னையில், டிசம்பர் 8,15,16-ம் தேதிகளில் `நாணயம் விகடன்’ சார்பில் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ நடைபெறுகிறது. டிசம்பர் 8-ம் தேதி நிகழ்ச்சியில், 'பூஜ்ஜியத்தின் மதிப்பு' என்ற தலைப்பில் 'கோ ஃப்ரூகல்' நிறுவனர் குமார் வேம்பு சிறப்புரையாற்றுகிறார்.

சென்னையில், டிசம்பர் 8,15,16-ம் தேதிகளில், `நாணயம் விகடன்’ சார்பில் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ நடைபெறுகிறது. டிசம்பர் 8-ம் தேதி நிகழ்ச்சியில், 'பூஜ்ஜியத்தின் மதிப்பு' என்ற தலைப்பில் 'கோ ஃப்ரூகல்' நிறுவனர் குமார் வேம்பு சிறப்புரையாற்றுகிறார்.

இன்ஜினீயரிங் பட்டதாரியான குமார் வேம்பு, சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருளை உருவாக்கிக்கொடுக்கும் கோ ஃப்ரூகல் நிறுவனத்தை 2004ல் தொடங்கினார். சில்லறை வர்த்தகத்திற்கான பணியாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்து, சிக்கனமாகச் செயல்பட உதவும் மென்பொருள் என்பதைக் குறிப்பதற்காக, ஃப்ரூகல் (Frugal) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். ஃப்ரூகல் என்றால், குறைவான செலவு என்று அர்த்தமாகும்.

சென்னையில் `நாணயம் விகடன்’ சார்பில் நடைபெறும் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’-ல் கலந்துகொள்ள... For Registration Click Here

சில்லறை வர்த்தக நிறுவனங்களில் கணினிப் பயன்பாடே பெரிதும் இல்லாத காலகட்டத்தில், விற்பனைக்கு உதவும் மென்பொருளைத் தயாரித்து மார்க்கெட்டிங் செய்வது சவாலான பணியாக இருந்தது. எனினும் மனம்தளராமல், சில்லறை வர்த்தக நிறுவனங்களை அணுகி, அவர்களுக்கு கணினியின் பயன்பாட்டை விளக்கிக்கூறி, அதன்பின் கணினி மென்பொருளையும் விற்பனை செய்துவந்துள்ளார். தற்போது, இவருடைய சேவை இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் 54 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இவரது மென்பொருளைப் பயன்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கையை நூறாக உயர்த்தும் இலக்குடன் செயல்பட்டுவருகிறார். தொழில்முனைவோர்கள், தங்களது முயற்சியில் வெற்றிபெறத் தேவையான அடிப்படைக்கூறுகள் எவை என்பதுகுறித்து இவரது உரையிலிருந்து கேட்டுப் பயன்பெறலாம்.

முன் பதிவு செய்ய 
http://bit.ly/nvconclave  For details 994041522