வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (03/12/2018)

கடைசி தொடர்பு:12:10 (03/12/2018)

`தி.மு.க-வில்தான் இருக்கிறோம்!’ - உறுதிப்படுத்திய கொங்கு 'ஈஸ்வரன்'

'நாங்கள் இன்னும் தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறோம்' என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

`நாங்கள் இன்னும் தி.மு.க கூட்டணியில்தான் இருக்கிறோம்' என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

eswaran

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதி இன்னும் கொடுக்கப்படவில்லை. அவசரகால நிதியாக முதல்வர் கேட்ட ரூ.1,500 கோடியும், மத்திய அரசு இதுவரை கொடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் இருக்கிற விவசாயிகளுடைய விளை பொருள்களுக்கு உரிய விலை வேண்டும் என்பதுதான் விவசாயிகளுடைய கோரிக்கை. 

தமிழகத்தைப் பொறுத்தவரை உழவர் சந்தைகள் திட்டத்தை மேம்படுத்துவதன்மூலம் அவர்களுடைய பொருள்களை நேரடியாக தேவையானவர்களுக்கு விற்க முடியும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஜனத்தொகை உள்ள பகுதிகளில் ஓர் உழவர் சந்தை வேண்டும். ஏழு கோடி ஜனத்தொகையுள்ள தமிழகத்தில், குறைந்தபட்சம் 700 உழவர் சந்தைகளாவது இருக்க வேண்டும். உழவர் சந்தைகள் திட்டத்தைத் தீவிரமாக செயல்படுத்துவதன் மூலமாகத்தான், விவசாயிகளை வாழவைக்க முடியும். மேலும், தங்களது கொ.ம.தே.க. கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில்தான் உள்ளது. ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதுதான் கூட்டணிகுறித்துக் கூறமுடியும்'' என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க