சிறந்த புகைப்படக் கலைஞருக்கு விருது வழங்கிய ஆட்சியர் வீரராகவ ராவ்! #NationalPressDay | District Collector who awarded the best photographer at the National Press Day ceremony.

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (03/12/2018)

கடைசி தொடர்பு:13:00 (03/12/2018)

சிறந்த புகைப்படக் கலைஞருக்கு விருது வழங்கிய ஆட்சியர் வீரராகவ ராவ்! #NationalPressDay

 ராமேஸ்வரத்தில் நடந்த தேசிய செய்தியாளர் தின விழா புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பரிசு வழங்கிக் கெளரவித்தார்.

ராமேஸ்வரத்தில் நடந்த தேசிய செய்தியாளர் தின விழா புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பரிசு வழங்கிக் கெளரவித்தார்.

தேசிய செய்தியாளர் தினவிழா


ராமேஸ்வரம் தீவு செய்தியாளர் மன்றத்தின் சார்பில், தேசிய செய்தியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது. செய்தியாளர் மன்றத் தலைவர் அ.அசோகன் தலைமையில் நடந்த இந்த விழாவில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துரை வழங்கினர். 

தேசிய செய்தியாளர் தினத்தை முன்னிட்டு, புகைப்படச் செய்தியாளர்களுக்கு சிறந்த புகைப்படத்திற்கான போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலிடம் பிடித்த புகைப்படச் செய்தியாளர்  உ.பாண்டி (விகடன்) மற்றும் இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த புகைப்பட செய்தியாளர்களுக்கு ரொக்கப் பரிசையும், கேடயங்களையும் வழங்கிய மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் சிறப்புரையாற்றினார்.
 இந்நிகழ்ச்சியில், மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் வெங்கடேசன், துணை கமாண்டர் சங்கர ராஜு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, டிஎஸ்பி மகேஷ், வன உயிரினக் காப்பக அலுவலர் சதீஷ், வட்டாட்சியர் சந்திரன், மூத்த பத்திரிகையாளர் வால்டர் ஸ்காட் மற்றும் மாவட்டத்தில் உள்ள செய்தியாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். 
 முன்னதாக, செய்தியாளர் பணியில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றிவருபவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும், கஜா புயல் நிவாரண நிதியாக முதல்வரின் நிவாரண நிதிக்கு ராமேஸ்வரம் செய்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் ரூ.40 ஆயிரத்திற்கான வரைவோலையை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் வழங்கினர். செய்தியாளர் மன்ற பொருளாளர் ஜோதி ராமலிங்கம் நன்றி கூறினார்.