வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (03/12/2018)

கடைசி தொடர்பு:16:00 (03/12/2018)

`ஹரிணி விஷயத்துல நம்பிக்கை விட்டுப்போச்சு சார்!’ - எஸ்.ஐ முரளி பகீர்

ஹரிணி

டந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் கடப்பாக்கம் அருகேயுள்ள இடைக்கழிநாடு கிராமத்திலுள்ள அம்மன் கோயில் திருவிழாவுக்கு ஊசிமணி பாசிமணி விற்கச் சென்றார்கள் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த வெங்கடேசன் காளியம்மாள் தம்பதி. வியாபாரத்தை முடித்துவிட்டு இருவரும் 2 வயது மகள் ஹரிணியோடு ஊர் திரும்பும் வழியில் வண்டி பழுதானதால் இரவில் அணைக்கட்டு காவல் நிலையத்துக்கு அருகேயே படுத்து உறங்கியிருக்கிறார்கள். மறுநாள் காலை பக்கத்தில் படுத்திருந்த ஹரிணி காணாமல்போக அந்த விடியலில் தமிழ்நாடே பரபரப்பானது. 

வெங்கடேசன் - காளியம்மாள்

மூன்று மாதங்களாகியும் ஹரிணி கண்டுபிடிக்கப்படாத சூழலில் வெங்கடேசனைத் தொடர்புகொண்டு பேசினோம். “சார், நானும் காளியம்மாளும் கரூர்ல இருக்கிறோம்ங்க. பாப்பா எப்படியாச்சும் கிடைச்சிடணும்னு வேண்டிக்கிட்டு சபரிமலைக்கு மாலை போட்டுருக்கேன். இப்போ கரூர்ல இருக்கிற கருப்பசாமியைக் கும்பிடுறதுக்காக வந்திருக்கோம். இத்தனை நாளா போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயே குந்திக்கின்னு கெடந்தோம். ஆனாலும், பாப்பாவை கண்டுபிடிச்சு கொடுக்கலை. 

ஹரிணி

அதிகாரிங்களை நம்பி ரொம்பவே மோசம் போயிட்டோம். அதான், இனி கடவுளை நம்பி வந்திருக்கோம். காளியம்மாவுக்கு இது எட்டாவது மாசம்ங்க. அது அங்கயே இருந்து புள்ளைய நெனச்சு அழுவுது. அதான் கோயிலுக்கு கூட்டியாந்துருக்கேன். எங்களுக்கு அடுத்த வாரிசு பொறக்குறதுக்குள்ள ஹரிணி எங்ககிட்ட வந்து சேந்துடணும்ங்க” என்றவரின் பேச்சில் வலி நிறைந்திருக்கிறது. 

தந்தை வெங்கடேசனுடன் ஹரிணி

இதுகுறித்து அணைக்கட்டு எஸ்.ஐ முரளியிடம் பேசினோம்.

“பாப்பாவோட அப்பாவும் அம்மாவும் ஸ்டேஷன்ல இருந்து கிளம்பிட்டாங்க. சமீபத்துல டெல்லி சில்ட்ரன்ஸ் கமிட்டியைச் சேர்ந்த ஆனந்த் இங்க வந்திருந்தாரு. இன்னும் 15 நாள்களுக்குள்ள குழந்தையைக் கண்டுபிடிச்சு பேரண்ட்ஸ்கிட்ட ஒப்படைக்கணும்னு சொல்லியிருக்காங்க. நாங்களும் எவ்வளவோ ட்ரை பண்ணிட்டுதான் இருக்கோம். ஹரிணி கிருஷ்ணகிரியில இருக்கிறதா தகவல் கிடைச்சது. அதனால, டவர் லொகேஷன் வெச்சு கண்டுபிடிக்க ஆரம்பிச்சிருக்கோம். பேரண்ட்ஸ்கிட்டயும் குழந்தை கிடைச்சிடுவாள்னுதான் சொல்லி வெச்சிருக்கோம். குழந்தை கிடைச்சிடும்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனாலும், பார்க்கலாம்.