கடலூரில் மதுபாட்டில்கள் கடத்தல் - கென்யா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது! | Smuggling of alcohol one person arrested in Cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:02:00 (04/12/2018)

கடலூரில் மதுபாட்டில்கள் கடத்தல் - கென்யா நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது!

 கடலூரில் மதுபாட்டில்களை கடந்தி வந்த கென்யா நாட்டைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவருடன் வந்தவர் தப்பி ஓடியுள்ளார். அவரையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

கடலூர்

ஆல்பேட்டை சோதனை  சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது காரில் புதுச்சேரியில் இருந்து உயர் ரக 100 மதுப்பாட்டில்கள்  கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரிலிருந்த ரூ1லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டது.  காரை ஓட்டி வந்த நபர் தப்பி ஓடிவிட்டார். கார் பின்னாடி காருக்கு பாதுகாப்பாக இரு சக்கர வாகனத்தில் வந்த கென்யா நாட்டைச் சேர்ந்த மோகன் என்பவரைக் கைது செய்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து வரும் கென்யா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்து வரும் கென்யா நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி இதேப் போல் மதுக்கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 மாதம் முன்பு இதேப்போல் காரில் மதுப்பாட்டில்கள் கடத்திய கென்யா நாட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.