`சுட்டி விகடன் போட்டி பயனுள்ளதாக இருக்கிறது’ - மதுரையில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவர்கள்! | Students are eagerly participate in chutti vikatan exam

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:08:00 (04/12/2018)

`சுட்டி விகடன் போட்டி பயனுள்ளதாக இருக்கிறது’ - மதுரையில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவர்கள்!

'மதுரை 200' சுட்டிகள் அசத்தல் !

மதுரையில், சுட்டிவிகடன் சார்பில் நடத்தபட்ட போட்டியில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

சுட்டி விகடன்

சுட்டி விகடனில்  பள்ளி மாணவர்களுக்காகப் பல்வேறு புதுமையான விஷயங்களைப் புகுத்திவருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அந்தந்த மாவட்டங்களுக்கும் தனித்தனியே இணைப்பு இதழ்கள் தயாரித்து, மாவட்டத்தில் உள்ள அத்தனை சிறப்புக்களையும் தகவல்களாக,  எளிமையான வடிவில் 200 தகவல்கள் நிறைந்த தொகுப்பாக மாற்றி, அதனை மாணவர்களுக்குக் கொடுத்து, அதில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அந்தப்  பதிலை ஓ.எம்.ஆர் ஷீட் மூலம் அளித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிவருகின்றனர். அந்த வகையில்,   மதுரை மாணவர்களுக்கு 'மதுரை 200' என்று இணைப்பை உருவாக்கி தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

டி.வி.எஸ் பள்ளி,  பாண்டியன் நெடுஞ்செழியன் கார்ப்பரேஷன் பள்ளி , தனபால் உயர் நிலைப் பள்ளி , காக்கைப்பாடினியார் பெண்கள் பள்ளி , ஜியோன் மெட்ரிக் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. தொடர்ந்து இன்றும் வேறு சில பள்ளிகள் கலந்துகொள்ள உள்ளன.

 

மாணவர்கள்

டி.வி.எஸ் பள்ளி மாணவன் மணிமாறன் கூறுகையில்," சுட்டி விகடன் நடத்தும் இந்தத் தேர்வின் மூலம் மதுரை பற்றிய அரிய தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. அரசு நடத்தும் போட்டித்தேர்வில் பயன்படுத்துவது போல ஓ.எம்.ஆர் ஷீட் வழங்கப்பட்டது நல்ல அனுபவனாக இருந்தது. வைகை நதியைப் பற்றிய தகவல் மிகவும் பிடித்திருந்தது" என்றார்.