வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (04/12/2018)

கடைசி தொடர்பு:13:45 (04/12/2018)

பார்வையாளர்களை வியக்கவைத்த மாற்றுத்திறனாளிகள்! - கண்கலங்கிய காஞ்சிபுரம் கலெக்டர்

சர்வதேச   மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு  காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், செல்போன் பயன்பாட்டின்  தீமைகள் குறித்து  மாற்றுத் திறனாளிகள் நடத்திய குறுநாடகம், பார்வையாளர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மாற்றுத் திறனாளிகள் நடித்த குறும்படம்

சர்வதேச  மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள  மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள்  விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா  தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகள், மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அதில், செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்குறித்து பொது மக்களிடையே விழிப்புஉணர்வு ஏற்படும் வகையில் நாடகம் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகள் நடித்த குறும்படம்

செல்போன் பயன்படுத்தி கொண்டே செல்லும் வாகன ஓட்டி ஒருவர் விபத்தில் சிக்குவதுபோன்றும், அவருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர், அடிக்கடி செல்போன் பயன்படுத்திக்கொண்டே சிகிச்சை அளிப்பது போன்றும் காட்சிகள் இருந்தன. செல்போனை எங்கெல்லாம் பயன்படுத்தக் கூடாது, அதன் விளைவுகள் ஒருவர் வாழ்க்கையை எப்படியெல்லாம் திசைமாற்றிவிடும் என்பதை விளக்கும் வகையில் நாடகம் தத்ரூபமான அமைந்தது. அவர்களின் நடிப்பு, மாவட்ட ஆட்சியர் உட்பட பலரைக் கண்கலங்கவைத்தது. 

மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசி வழங்கும் காஞ்சிபுரம் கலெக்டர்

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா , “இங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாணவ மாணவிகள் தங்கள் திறமையை உலகிற்கு  எடுத்துச்சொல்லும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வெளிக்காட்டியுள்ளனர். பார்ப்பவர்கள்  வியக்கும் அளவுக்கு அவர்களது திறமை வெளிக்காட்டப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளாக இருந்தாலும், உள்ளத்தில் ஊனமின்றி அவர்கள் உற்சாகத்தோடு சாதாரண மனிதர்களைவிடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்” என அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து பரிசுகளை வழங்கினார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க