``வாக்குவங்கி இருக்கும் தொகுதியில் சீட்!” - கூட்டணிக்கு ஈஸ்வரனின் ஐடியா! | Kongu party leader eswaran said about election seats in dmk party

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (04/12/2018)

கடைசி தொடர்பு:15:05 (04/12/2018)

``வாக்குவங்கி இருக்கும் தொகுதியில் சீட்!” - கூட்டணிக்கு ஈஸ்வரனின் ஐடியா!

'வாக்கு வங்கி இருக்கும் தொகுதிகளில்தான் கூட்டணி கட்சிகளுக்கு சீட் தர வேண்டும்' என்று கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈஸ்வரன்

கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி மற்றும் கொங்கு வேளாளர் பேரவையின் சார்பாக, கலாசார விழிப்பு உணர்வுக் கூட்டம் நேற்று திருச்செங்கோட்டில் நடந்தது. இதில், குமரகுருபரர் ஸ்வாமிகளின் கணபதி வழிபாடு மற்றும் வேள்வி நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், ``டெல்லியில் போராடும் விவசாயிகள் நிர்வாணப் போராட்டத்தைக் கைவிட்டு, அரசைக் கவரும் வகையில் கண்ணியமான போராட்டத்தில் ஈடுபட வேண்டும். ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளுக்கிணங்க போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

ஸ்டாலின்

தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் சிறு கட்சிகள்கூட அச்சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் தேசம் காப்போம் என்ற மாநாடு ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் இருக்கக் கூடாது. அதில், தேச ஒற்றுமைகுறித்தே அனைவரும் பேசவேண்டும். வாக்கு வங்கி இல்லாமல் இருக்கும் தொகுதிகளை ஒதுக்காமல், கூட்டணி கட்சிகளுக்கு எங்கு வாக்கு வங்கி உள்ளதோ, அந்தத் தொகுதிகளையே ஒதுக்க வேண்டும். வரும் பிப்ரவரியில், உலக கொங்கு தமிழர் மாநாடு நடத்த உள்ளோம். அதற்கான வேலைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன' என்றார் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க