`நான் சொன்னதும் மழை வந்துச்சா?‘ - தமிழக வெதர்மேனின் மழை ரிப்போர்ட்  | Tamilnadu weatherman's rain report  

வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (04/12/2018)

கடைசி தொடர்பு:14:06 (04/12/2018)

`நான் சொன்னதும் மழை வந்துச்சா?‘ - தமிழக வெதர்மேனின் மழை ரிப்போர்ட் 

வெதர்மேன்

தமிழகத்தின் வெதர்மேன் சொன்னபடியே நேற்று மாலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓரளவுக்கு மழை பொழிவு இருந்தது. அவரின் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தது போலவே சென்னை, காரைக்கால், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. 

மழை
 

அவரின் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த தகவல் பின்வருமாறு,

``கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக வரும் 6-ஆம் தேதி வரை, மழை பெய்யக்கூடும். இந்த மழை காற்றழுத்த தாழ்வு நிலையாலோ புயல் காரணமாகவோ வருபவை அல்ல. எனவே, புயல் வரப்போகிறது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வரும் 5-ஆம் தேதி வரை மழைப் பொழிவு இருக்கும். சென்னையைப் பொறுத்தவரை இடைவெளி விட்டுதான் மழைபெய்யும். தொடர்ச்சியாக மழை பெய்யாது.   

வெதர்மேன்

Credits : Facebook / Tamil Nadu Weatherman

டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று மழைத் தொடங்கிவிடும். இப்பகுதிகளில் 4-ஆம் தேதி வரை மழைப்பொழிவு இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் 5 மற்றும் 6-ம் தேதிகளில் கன மழை பெய்யும். டிசம்பர் 6-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான நீலகிரி உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், நெல்லூர், சித்தூர், தென் சென்னைப் பகுதிகளான காஞ்சிபுரம், கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகள், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்” இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

மழை
 

தற்போது பெய்து வரும் மழைக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமல்ல என்று வெதர்மேன் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் `தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது’ என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் ``தமிழகத்தில் பரவலாக அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும். அடுத்த 2 நாள்களுக்குத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை தொடரும். நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது” என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமன்றி 6-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையானது, காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரமடையும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க