வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (04/12/2018)

கடைசி தொடர்பு:15:55 (04/12/2018)

` மளிகைப் பொருள்தான்...!' - அரசுப் பேருந்தில் கடத்திய போதைப் பொருள் கும்பல்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் வேனில் கடத்தி வரப்பட்ட குட்காவை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குட்கா கும்பல்

பெங்களூருவிலிருந்து, திருச்செங்கோட்டுக்கு அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 9 மூட்டை குட்காவை வரப்பாளையம் அருகே நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் பறிமுதல் செய்தார். நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் குட்காபுஷ்பராஜ் நேற்று முன்தினம் காலை, திருச்செங்கோடு அருகே வரப்பாளையத்தில் பறிமுதல் செய்தார். இதை கடத்தி வந்தவர்கள் தப்பியோடி விட்டனர். வேனின் உரிமையாளர் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். கைப்பற்றபட்ட போதை பொருள்களின் மதிப்பானது 450 கிலோ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது பற்றி நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ், செய்தியாளர்களிடம் கூறுகையில், `பறிமுதல்  செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு 5 லட்சம் இருக்கும். இவற்றை கொண்டு வந்தவர்கள், மளிகைப் பொருள்தான் இருக்கிறது. வேறொன்றும் இல்லை எனக் கூறி பெங்களூருவிலிருந்து அனுப்பியதாக பஸ் டிரைவர், கண்டக்டர் கூறுகிறார்கள். 9  மூட்டைக்கும் லக்கேஜ் போடப்பட்டுள்ளது. 9 மூட்டைக்குள்ளும், ஒவ்வொரு மூட்டைகள் இருந்தன. அதில்தான் போதைப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது. பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வரக் கூடாது என்ற நோக்கில், இப்படி 2 சாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவிலிருந்து கடத்தி வரும் நபர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க