`ஃபிளிப்கார்டில் ஆர்டர் செய்தது ஐ போன்... வந்தது சைனா போன்!'' - நடிகர் நகுலுக்கு நேர்ந்த கொடுமை | We have got duplicate i phone from flipkart alleges Actor Nakul

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:19:00 (04/12/2018)

`ஃபிளிப்கார்டில் ஆர்டர் செய்தது ஐ போன்... வந்தது சைனா போன்!'' - நடிகர் நகுலுக்கு நேர்ந்த கொடுமை

`ஃபிளிப்கார்டில் ஆர்டர் செய்தது ஐ போன்... வந்தது சைனா போன்!'' - நடிகர் நகுலுக்கு நேர்ந்த கொடுமை

``நான் ஆர்டர் செய்த `ஐ போன்'க்குப் பதிலாக, போலியான சைனா மொபைலை அனுப்பி வைத்திருக்கிறார்கள் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தினர்'' என நடிகர் நகுல் செய்தி வெளியிட, நகுலின் மனைவி சுருதியிடம் பேசினேன்.

``எங்களுக்கு மூன்றாவது திருமணநாள் வர உள்ளது.எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க, நகுல் ஃபிளிப்கார்டில் `ஐ போன்' ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார். நவம்பர் 30-ம் தேதி வீட்டில் பார்சல் டெலிவரி செய்திருக்கிறார்கள். அன்று நாங்கள் ஊரில் இல்லாததால் பார்சலை டிசம்பர் ஒன்றாம் தேதி அன்றுதான் பிரித்தோம். நகுல் வாங்கிக் கொடுத்த அந்த சர்ப்ரைஸ் கிஃப்ட் என்னவாக இருக்கும் என ஆசையோடு பார்சலை பிரித்த எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. வந்த போன் சைனா மாடல் போலி `ஐ போன்'.

நகுல்

ஃபிளிப்கார்டின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்ட்கிட்ட இருந்துதான் போன் வந்திருந்தது. ஒன்றரை லட்ச ரூபாய்க்கு ஆர்டர் பண்ணி, அவங்க அனுப்பின சைனா போன்ல ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் வந்தது. அதோட அந்த போனோட நிறம், எடை, தரமற்ற பிளாஸ்டிக்னு எதுவும் ஒத்துப்போகலை. உடனே நகுல் ஃபிளிப்கார்ட் கஸ்டமர் கேர் ஆட்களைத் தொடர்புகொண்டார். ஆனா அவங்களோட ஜஸ்ட் லைக் தட்னு எங்களை டீல் பண்ணினாங்க.

நகுல் - சுருதி

ஐந்து நாள் ஆன பிறகும் பொறுப்பான பதில் வரவே இல்லை. உடனேதான் நகுல் தன்னோட சோசியல் மீடியா பேஜ்ல இதைப் பத்தி போட்டார். செலிபிரட்டி உடனே நல்ல ரீச் கிடைச்சுடுங்கிறதை உணர்ந்து உடனே எங்களை காண்டாக்ட் பண்ணி போனை வாங்கிக்கிட்டாங்க. ஆனா பணத்தை இன்னும் திருப்பித் தரலை. அவரோட போஸ்ட்டை படிச்ச பலரும் நாங்களும் இப்படி ஏமாந்திருக்கோம்னு ரிப்ளை பண்ணினாங்க. படிச்ச எங்களையே இப்படி ஏமாத்துறாங்கனா, பாமர மக்களை எப்படியெல்லாம் ஏமாத்துவாங்களோ'' என்று வருத்தமானார் சுருதி நகுல்.