அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பயிற்சி மருத்துவர்கள்! | Training doctors give treatment to OP patients in kanyakumari as doctors staged protest

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:00:00 (05/12/2018)

அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பயிற்சி மருத்துவர்கள்!

ம்பள உயர்வு கேட்டு அரசு மருத்துவர்கள் புற நோயாளிகளுக்கு இன்று ஒரு நாள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் பயிற்சி மருத்துவர்கள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தனர். தொடர் போராட்டம் நடத்தப்போவதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை

மத்திய அரசு மருத்துவர்கள் மற்றும் பிற மாநில அரசு மருத்துவர்களை ஒப்பிடும்போது தமிழக அரசு மருத்துவர்களுக்குச் சம்பளம் குறைவு எனவும். அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற சம்பளம் வழங்க வேண்டும் எனக் கேட்டும் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு இன்று அரசு மருத்துவமனைகளில் `புற நோயாளிகள் சிகிச்சை ஒரு நாள் புறக்கணிப்பு' போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை

இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க குமரி மாவட்டத் தலைவர் பிரின்ஸ் பயஸ் கூறுகையில், ``மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்குவதைவிடக் குறைந்த அளவு சம்பளமே தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்குகிறார்கள். புற நோயாளிகளுக்குச் சிகிச்சை புறக்கணிக்கும் போராட்டத்தில் அவசர நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கிறோம். போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்காமல் இருந்தால்,

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை

அடுத்தகட்டமாக வரும் 8-ம் தேதியில் இருந்து ஆபரேஷன் மற்றும் காப்பீடு திட்ட மருத்துவத்தைப் புறக்கணிப்போம். அதிலும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் வரும் 12-ம் தேதி மீண்டும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் புறக்கணிக்கும் போராட்டமும், 13-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்துவோம்" என்றார்.