சிவகங்கை ஆட்சியர் காரை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்! - கலெக்டர் அலுவலக பரபரப்பு | Court orders for confiscation of sivaganga district collector's car

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (04/12/2018)

கடைசி தொடர்பு:23:30 (04/12/2018)

சிவகங்கை ஆட்சியர் காரை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்! - கலெக்டர் அலுவலக பரபரப்பு

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் வாகனத்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கார் ஜப்தி

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் முகமது காசிம் என்பவருக்குச் செந்தமான 4 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறைக்காக மாவட்ட நிர்வாகம் வாங்கியிருந்தது. அந்த இடத்தை பயனாளிகளுக்கும் வழங்கவில்லை. வாங்கிய  நிலத்துக்கு பணமும் இதுவரை வழங்கவில்லை. நிலத்துக்கான பணம் வழங்க வேண்டும் என்று முகமது காசிம், சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பணத்தை வழங்க  நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் பணத்தை வழங்காத நிலையில், சிவகங்கை சார்பு நீதிமன்றம் ரூ.27 லட்சம் அவருக்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது. அதையும் கொடுக்காத நிலையில், 26 லட்ச ரூபாய் மதிப்புள்ள மாவட்ட ஆட்சியரின் இன்னோவா காரை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் இன்று ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக  காணப்பட்டது.

நீதிமன்ற ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் காலையிலிருந்து இரவு நேரமாகியும் காத்திருக்கிறார்கள். இதுவரைக்கும் மாவட்ட ஆட்சியர் கார் சாவியை நீதிமன்ற ஊழியர்களிடம் ஒப்படைக்கவில்லை. காரை  ஜப்தி செய்தால் அவமானமாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் கருதுவதால் கால அவகாசம் கேட்பதாக சொல்லப்படுகிறது. ஆட்சியர் கார் ஜப்தி செய்யப்படுமா, இல்லையா, நீதிமன்ற மறு உத்தரவு வருமா என்று தெரியாத நிலையில் இருக்கிறார் பாதிக்கப்பட்ட முகமது காசிம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க