காடுவெட்டி குரு குடும்பத்தினரிடையே சமாதானப் பேச்சு! - பா.ம.க கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம் | Ariyalur district administration accepts PMK's demand over Kaduvetti guru's family

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (04/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (04/12/2018)

காடுவெட்டி குரு குடும்பத்தினரிடையே சமாதானப் பேச்சு! - பா.ம.க கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம்

காடுவெட்டி குரு குடும்பத்தினரிடையே சமாதானம் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

                                  காடுவெட்டி குருவின் மனைவி லதா

மாநில வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குரு உடல்நலக் குறைவால் இறந்துவிட்ட நிலையில் அவரின் குடும்பத்தில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. காடுவெட்டி குருவின் மனைவி லதா, தனது சம்மதமில்லாமல் சொத்துக்காக என் பிள்ளைகளை காடுவெட்டி குருவின் தங்கை மகனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டனர்'' என குருவின் குடும்பத்தார் மீது குற்றம்சாட்டினார்.

                               காடுவெட்டி குருவின்

எங்களுக்குச் சொந்தமான சொத்தை என் தாயாரின் குடும்பத்தினர் அபகரிக்க முயற்சி செய்வதாகக் குருவின் மகன் வாட்ஸ் அப்பில் வீடியோ மூலம் குற்றம்சாட்டினார். இந்தநிலையில் புதிதாகத் திருமணம் செய்துகொண்ட குருவின் மகள் தன் தந்தையின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வருவதற்குக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து விரட்டி அனுப்பினார்கள். இரு குடும்பங்களும் மாறி மாறி ராமதாஸையும் பா.ம.க-வையும் திட்டித் தீர்த்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

                                

இதனிடையே, குருவின் குடும்பத்தினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு ஏற்படுத்த பா.ம.க-வினர் உடையார்பாளையம் தாசில்தாரை அணுகினர். பின்பு அவர் முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து குருவின் மனைவி லதா, அவரின் மகன் மற்றும் மகள், குருவின் தங்கை குடும்பத்தினர், குருவின் தாயார் மற்றும் கிராமப் பொதுமக்கள் இடையே உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை தனித்தனியாக நடைபெற்றது.