வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:01:00 (05/12/2018)

சிவகங்கை அருகே டீத்தூளில் கலப்படம் - கம்பெனிக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்!

திருப்புத்துாரில் கலர் சாயமூட்டப்பட்டு அனுமதியில்லாமல்  விற்பனைக்கு வைத்திருந்த ஒன்றரை டன் எடையுள்ள ரூ 2 லட்சம் மதிப்புள்ள கலப்பட டீத்துாள் பண்டல்களை உணவுப்பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தனுக்கு கலப்பட டீத்தூள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஸ் சந்திரபோஸ், தலைமையில்  உணவு பாதுகாப்பு அலுவலர் சையது இப்ராகிம், செல்வன், வேல் முருகன் ஆகியோர் கொண்ட டீம் திருப்புத்துார் அகிழ்மனைத் தெருவில், முத்துராமலிங்கம் மகன் தங்கராஜ் என்பவரின் வீட்டில் ஆய்வு செய்தனர். அங்கு தெளிவான முகவரியிடாமல், பேக்கிங் செய்யப்பட்ட டீத்துாள் பண்டல்கள் இருந்தன.

அந்த  பண்டல்களில் அனுமதி எண் ஏதும் இல்லை. ஒரு கிலோ, அரைகிலோ எடைகளில் பண்டல்கள் இருந்தன. பண்டலைப் பிரித்து டீத்துாளை ஆய்வு செய்த போது அதில்  செயற்கை கலர்மூட்டிருப்பது தெரிந்தது. முறையான உரிமமோ, அனுமதியோ பெறாமல் இந்த  டீத்துாள் பண்டல்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்று வருவதும் தெரிந்தது.  உணவுப்பாதுகாப்புத்துறையினர் கூறுகையில், ‛ இங்கு     நான்கு வகையான   டீத்துாள்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை  ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க