தகாத உறவால் தனது மூன்றவயது குழந்தையை கொன்ற தாய் - கொந்தளிக்கும் உறவினர்கள்! | A mother who killed a three-year-old child because of illegal affair

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:03:00 (05/12/2018)

தகாத உறவால் தனது மூன்றவயது குழந்தையை கொன்ற தாய் - கொந்தளிக்கும் உறவினர்கள்!

தகாத உறவின் எதிரொலியாக தனது 3 வயது குழந்தையை கயிற்றால் இறுக்கி கொன்ற பெண்ணால் கரூர் மாவட்டமே பரபரத்துக் கிடக்கிறது.

 இறந்த குழந்தையை பார்த்து கதறியழும் உறவினர்கள்...

கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே உள்ள பரளி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் ரம்யா என்ற 24 வயது பெண். இவரது மகள் வேதவர்ஷினி. வயது 3. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக ரம்யாவுக்கும்,திருச்சி மாவட்டம்,கொழக்குடி பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால்,ரம்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தங்கதுரை நொந்துபோனார். 'மணிமாறனோடு உள்ள தொடர்பை துண்டி' என்று மன்றாடிக் கேட்டிருக்கிறார் தங்கதுரை. ஆனால்,ரம்யாவோ மணிமாறனோடு மட்டுமே குடும்பம் நடத்தியுள்ளார். இதனால்,வெறுத்துப் போன தங்கதுரை திருமணம் ஆன கொஞ்ச நாளிலேயே ரம்யாவை துரத்திவிட்டிருக்கிறார். ஆனால்,ரம்யா சுதந்திரமாக மணிமாறனோடு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் வேதவர்ஷினி.


 இறந்த குழந்தையை பார்த்து கதறியழும் உறவினர்கள் 1

இந்நிலையில்,ரம்யாவுக்கும்,மணிமாறனுக்கும் அடிக்கட்டி சண்டை வந்திருக்கிறது. ரம்யா மீது சந்தேகப்பட்ட மணிமாறன்,'நான் உனக்கு ரெண்டாவது புருஷன்தானே?. அதனால், நீ இன்னும் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் தொடர்பு வச்சுக்குவ. வேதவர்ஷினி நமக்கு பிறந்த குழந்தையே இல்லை' என்று மணிமாறன் ரம்யாவோடு அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இப்படி அடிக்கடி ஏற்பட்ட கருத்துவேறுபாட்டாலும்,சண்டையாலும் மனமுடைந்த ரம்யா,இன்று தனது மகள் வேதவர்ஷினியை கழுத்தில் கயிற்றால் இறுக்கிக் கொலை செய்துள்ளார். 

. சம்பவத்தை விசாரிக்கும் போலீஸார்

பின்,ரம்யா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால்,இச்சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் ரம்யாவை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடையில்,பச்சக் குழந்தையை பெற்ற தாயே கள்ளக்காதலனோடு ஏற்பட்ட தகராறில் கழுத்தை இறுக்கிக் கொன்றதை தாங்கி கொள்ள முடியாமல் ரம்யாவின் உறவினர்கள் கதறி அழுதனர். 
 ரம்யா(குழந்தையை கொன்ற தாய்)"குழந்தையை கொல்ல எந்த தாய்க்கும் இப்படி மனசு வராது. சாக நெனச்சக் கழுத,அவ சாக வேண்டியதுதானே?. குழந்தையை கொன்னு,வம்சத்தையே அழிச்சுட்டாளே. குடும்ப மானத்தை கெடுத்தப்பகூட அவளை ஒண்ணும் செய்யலை நாங்க. இந்த பச்ச மண்ண கொன்ன அவளை தூக்குல தொங்கவிடனும்" என்று கதறினர். பெற்ற தாயே மூன்று வயது குழந்தையை கழுத்தை இறுக்கிக் கொன்ற கொடூர சம்பவம் குளித்தலை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.