வெளியிடப்பட்ட நேரம்: 08:02 (05/12/2018)

கடைசி தொடர்பு:08:02 (05/12/2018)

தாமரை... சூரியன்.... திடீர் வார்த்தை மோதலில் தமிழிசை - ஸ்டாலின்!

'தாமரை மலர சூரிய சக்தி தேவை' என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசைக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

ஸ்டாலின்

மேகதாது அணைக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிராக, நேற்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``தமிழகத்தில் தண்ணீர் இல்லை; புல்கூட முளைக்காத சூழலில், தாமரை மலர்ந்துவிடுமா? குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது பா.ஜ.க" என ஆவேசமாகப் பேசினார். 

ஸ்டாலின்

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, ``இனி மழைக்காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும, தாமரை மலரும்.செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வர வைத்தாகிலும் குளங்களை நிரம்பவைத்து  தாமரையை மலரச்செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்" எனக் கூறியிருந்தார். தமிழிசையின் கருத்துக்கு ஸ்டாலின் ட்விட்டர் மூலமே கருத்து தெரிவித்திருந்தார். 

தமிழிசையின் ட்வீட்டை மேற்கோள்காட்டி, ``சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலரச் சூரிய சக்தி தேவை. சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்" எனக் கிண்டல் அடிக்கும் விதமாகப் பதிலளித்துள்ளார். 

ட்விட்டர்

தொடர்ந்து ஸ்டாலினுக்கு பதிலளித்த தமிழிசை, ``அதிகாலையில் சூரியன் உதிப்பதற்குள் இதழ்விரித்து தாமரை மலர்கிறது. இது அன்றாட நிகழ்வு.. மேக மூட்டத்தில் சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும், சூரிய சக்தி செடியில் இருக்கும் மலரைக் கருகச்செய்யும் குளத்து நீரில் மிதக்கும் தாமரையை, கருகச்செய்யாது, கருகச்செய்யவும் முடியாது... இது இயற்கை நியதி" எனக் கூறியுள்ளார். 

தமிழிசை

இவர்களின் இந்த திடீர் ட்விட்டர் மோதல் தற்போது இரு கட்சி நிர்வாகிகளிடமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க