கறுப்புச்சட்டையில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் - ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவுப் பேரணி | AIADMK leaders pay tribute to former Chief Minister Jayalalithaa on her 2nd death anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (05/12/2018)

கடைசி தொடர்பு:13:51 (05/12/2018)

கறுப்புச்சட்டையில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் - ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவுப் பேரணி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மரியாதைசெலுத்தினார். 

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து, இன்று அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. நினைவு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் அமைதிப் பேரணி நடத்தி வருகின்றன. 

அ.தி.மு.க சார்பில், ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் காலை 9.30 மணிக்கு அமைதிப் பேரணி நடைபெற்றது. அப்போது, சென்னை வாலாஜா சாலை முதல் மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை அ.தி.மு.க-வினர் பேரணி சென்றனர். பேரணியின்போது முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கறுப்புச்சட்டை அணிந்து பேரணியில் பங்கேற்றனர். 

ஓபிஎஸ் - ஈபிஎஸ்

பேரணியைத் தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ``ஜெயலலிதா வகுத்த பாதையில் மக்களுக்கு நல்லது செய்ய உறுதுணையாக இருப்போம். ஒற்றுமையாகச் செயல்பட்டு அ.தி.மு.க-வை கட்டிக்காப்போம்" என முதல்வர் உட்பட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மலர் அஞ்சலிசெலுத்தினார்.

ஈபிஎஸ்

இதற்கிடையே, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், டி.டி.வி.தினகரன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. இவர்களின் பேரணியை அடுத்து, வாலாஜா - மெரினா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க