வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (05/12/2018)

கடைசி தொடர்பு:15:14 (06/12/2018)

20 நாடுகள்... 500 தொழிலதிபர்கள்! - ஒன்றுகூடும் தமிழ் தொழில்முனைவோர்கள்

மிழர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் பிற நாடுகளில் வசிக்கும் தமிழ் தொழில் முனைவோர்கள் இணைந்து மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 

தமிழ் தொழில்முனைவோர்கள்

பிற நாடுகளில் தொழில் செய்துவரும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் ஒன்றாக இணைந்து தமிழர்களின் தொழிலை மேம்படுத்தும் விதமாக வரும் 28, 29, 30-ம் தேதிகளில் மதுரையில் மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதற்காக ‘எழுமின்’ என்ற அமைப்பையும் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் அமைப்பு அறிமுகம் ஆகியவை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழிலதிபர்களை அறிமுகம் செய்து வைத்தார் ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பர். 

தமிழ் தொழில்முனைவோர்கள்

மாநாட்டின் நோக்கம் குறித்து விவரித்த மேற்கு வங்க அரசில் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன், ``தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் தொழிலில் ஈடுபடவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் உலகத் தமிழ் தொழில் முனைவோர்கள் இணைந்து மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா, கத்தார், ஓமன், குவைத், ஜெர்மனி, கனடா, அமெரிக்க என 20-க்கு மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் கலந்துகொள்ள இதுவரை 250-க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்” என்றார் நெகிழ்ச்சியோடு.