வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (05/12/2018)

கடைசி தொடர்பு:20:40 (05/12/2018)

`கோவையில் யானை வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்’ - தலைமைச் செயலாளருக்கு மனு!

கோவை யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது

.யானை வழித்தடங்கள்

கோவை தடாகம், ஆனைக்கட்டி பகுதிகளில் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் யானைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து, அங்குள்ள, விநாயகன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய காட்டு யானைகளைப் பிடிக்க வனத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

யானை

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளராக உள்ள செந்தில்குமார், “கோவையில் கடந்த சில ஆண்டுகளில் விவசாய நிலங்களை, கார்ப்பரேட் நிறுவனங்களை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டன. மேலும், பள்ளவாரி, நீர்வழித்தடங்கள் போன்ற அரசுக்குச் சொந்தமான நிலங்களும் யானை வழித்தடங்களும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

யானை

அப்படியிருக்கும்போது, காட்டு யானைகளை மயக்க ஊசி போட்டு இடமாற்றம் செய்வது என்பது இயற்கைக்கு எதிரான செயல். இதனால், வன விலங்களுக்கு பேராபத்து ஏற்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி, தலைமைச் செயலாளர், வனத்துறை மற்றும் வேளாண்துறைச் செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.