வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (05/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (05/12/2018)

மேட்டுப்பாளையம் டு கல்லார் இடையே பஸ் ரயில் சோதனை! - தோல்வியில் முடிந்த முயற்சி

மேட்டுப்பாளையம் - கல்லார் பஸ் ரயில் சோதனை ஓட்டம் தோல்வியில் முடிந்தது.

பஸ் ரயில் சோதனை ஓட்டம்

மேட்டுப்பாளையம் - உதகை இடையே ஏற்கெனவே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்குச் சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், நீலகிரியின் சுற்றுலா தலத்தை மேம்படுத்த, குன்னூர் - உதகை இடையே பேருந்து வடிவில் இருக்கும் பஸ் ரயில் திட்டத்தைக் கொண்டுவர தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

பஸ் ரயில்

60 பேர் இந்த ரயிலில் பயணம் செய்யலாம். இதற்காக, அகமதாபாத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு, இந்தப் பஸ் ரயில் கடந்த மாதம் கொண்டு வரப்பட்டது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் முதல்கட்ட சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் - கல்லார் வழிப்பாதையில் இன்று இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பஸ் ரயில் சோதனை ஓட்டம்

ஆனால், இந்த ரயில் கல்லார் மேட்டில் ஏறவில்லை. பலமுறை முயற்சி செய்தும், சோதனை முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. இன்ஜின் கெப்பாசிட்டி குறைவாக இருப்பதால், இந்தச் சோதனை தோல்வியில் முடிந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து, இன்ஜினை இதற்கு ஏற்றாற்போல மாற்றிவிட்டு, பின்னர் மேட்டுப்பாளையம் - கல்லார், குன்னூர் - ஊட்டி வழித்தடங்களில் சோதனை செய்துவிட்டு, இத பஸ் ரயில் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.