வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (06/12/2018)

கடைசி தொடர்பு:01:00 (06/12/2018)

சிவகங்கை மாவட்ட கலெக்டரின் காரை ஜப்தி செய்ய வந்தவர் மீது வழக்கு பதிவு!

சிவகங்கை மாவட்ட கலெக்டரின் காரை ஜப்தி செய்ய வந்தவர் மீது கலெக்டர் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் கார்


சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காளையப்பா நகரைச் சேர்ந்தவர் முகமது காசிம்(63). அதே பகுதியில் இவருக்கு சொந்தமான 3 ஏக்கர் 18 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிவகங்கை மாவட்ட ஆதி திராவிட நலத் துறை சார்பில் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இலவசமாக வீட்டு மனைபட்டா வழங்குவதற்காக  கடந்த 1998 ஆம் ஆண்டு ஒரு சென்ட் ரூ.136 வீதம் பேசி ரூ.50 ஆயிரத்தை  கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர்.
 
இந்நிலையில்,இந்த தொகை போதுமானதாக இல்லை எனக் கூறி முகமது காசிம் சிவகங்கையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு கடந்த 4.10.2016 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது.அப்போது நிலம் வழங்கிய முகமது காசிமுக்கு அரசு தரப்பிலிருந்து ரூ.26 லட்சத்து 36 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கபட்டது. ஆனால் பல ஆண்டுகளாகியும் உரிய பணம் வழங்கப்படவில்லை. இதனால் முகமது காசிம் மேல் முறையீடு செய்தார்.அந்த வழக்கில் மாவட்ட  கலெக்டரின்  காரை ஜப்தி செய்ய  கோர்ட்டில் உத்தரவிடப்பட்டது
 
இதையடுத்து,முகமது காசிம் மற்றும் நீதிமன்ற  ஆமீனாவுடன் செவ்வாய்க்கிழமை  கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.மாவட்ட ஆட்சியரின் வாகன ஓட்டுநர் இல்லாததால் மாலை 6 மணி வரை காத்திருந்த அவர்கள் அதன் பின்பு ஜப்தி நோட்டிஸை காரில் ஒட்டினர்.தொடர்ந்து காரை எடுத்து செல்வதற்காக தனியார் வாகனம் வரவழைக்கப்பட்டது. இருப்பினும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கதவு மூடப்பட்டது.இதனால் வாகனத்தை எடுக்க முடியாத முகமது காசிம் அலுவலக  வளாகத்திலேயே அமர்ந்திருந்தார் .பின்னர் நள்ளிரவில் அவர் சென்று விட்டார்
 
இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் இது தொடர்பாக சிவகங்கைநகர்போலீசில் புகார் ஒன்று கொடுத்தார்.
அதில் இந்த வழக்கில் ஆதிதிராவிடர் தனி தாசில்தார் மீது போடப்பட்டது. இதில்  என்னுடையகாரை ஜப்தி செய்ய கூடாது என்று நீிதமன்றத்திற்கும், சம்பந்தபட்ட பார்ட்டிக்கும் தெரிவித்தும் கலெக்டர் அலுவலகத்தில் பணியை செய்யவிடாமல் தடுக்கதாக தெரிவித்ததிருந்தார்.இது தொடர்பாக சிவகங்கை நகர் சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் முகமது காசிம் மீது வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க