தொழில்முனைவோருக்கு உதவும் எதிர்கால தொழில்நுட்பம்: மணிகண்டன் தங்கரத்னம் சிறப்புரை! | Nanayam Vikatan Business Conclave!

வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (06/12/2018)

கடைசி தொடர்பு:11:47 (06/12/2018)

தொழில்முனைவோருக்கு உதவும் எதிர்கால தொழில்நுட்பம்: மணிகண்டன் தங்கரத்னம் சிறப்புரை!

கணினித்துறை சார்ந்த தொழில்முனைவோருக்கு, சர்வதேச அளவில் பெரிய தொழில்வாய்ப்புகள் பெருகிவருகின்றன. குறிப்பாக அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக உலகம் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுவருகிறது. இந்த வர்த்தகத் துறையில் தொழில் வாய்ப்புகளை எப்படிக் கையாள்வது, எந்த மாதிரியான ஆப்களுக்கு எதிர்காலத்தில் வரவேற்பு இருக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொள்ள, இளம் தொழில்முனைவோருக்கு இவரது சிறப்புரை பயனுள்ளதாக இருக்கும்.

சென்னையில், டிசம்பர் 8,15,16-ம் தேதிகளில் `நாணயம் விகடன்’ சார்பில் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ நடைபெறுகிறது. டிசம்பர் 8-ம் தேதி நிகழ்ச்சியில், அமேசான் டிஜிட்டல் ஆப் கேம்ஸ் சர்வீஸஸ் குரூப் இயக்குநரான மணிகண்டன் தங்கரத்னம், 'டெக்னாலஜி கேட் டு ஃப்யூச்சர்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

மணிகண்டன் தங்கரத்னம்

மணிகண்டன் தங்கரத்னம், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் நிறுவனத்தின் ஆப் தயாரிப்புகளில் 15 ஆண்டுகால அனுபவம்மிக்கவர். ஆப் உருவாக்கத்தில் தொடக்க டிசைன் முதல் இறுதிவரை முழுமையான பங்களிப்பு செலுத்தக்கூடியவர். டெக்னாலஜி மீது தீராத காதல் கொண்டவர். இதன்மூலம் பொதுமக்களுக்கு பல நன்மைகளை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்பட்டுவருபவர். இளம் கணினிப் பொறியாளர்களோடு இணைந்து பணியாற்றுவதிலும், அவர்களை வழிநடத்துவதிலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். 

சென்னையில், `நாணயம் விகடன்’ சார்பில் நடைபெறும் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’-ல் கலந்துகொள்ள... For Registration Click Here

கணினித்துறை சார்ந்த தொழில்முனைவோருக்கு, சர்வதேச அளவில் பெரிய தொழில் வாய்ப்புகள் பெருகிவருகின்றன. குறிப்பாக, அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக உலகம் பெரிய அளவில் வளர்ச்சிகண்டு வருகிறது. இந்த வர்த்தகத் துறையில் தொழில்வாய்ப்புகளை எப்படிக் கையாளுவது, எந்த மாதிரியான ஆப்களுக்கு எதிர்காலத்தில் வரவேற்பு இருக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொள்ள, இளம் தொழில்முனைவோருக்கு இவரது சிறப்புரை பயனுள்ளதாக இருக்கும்.

முன்பதிவு செய்ய 

http://bit.ly/nvconclave  For details 994041522