வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (06/12/2018)

கடைசி தொடர்பு:12:20 (06/12/2018)

புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும்! - தீர்ப்பை உறுதிப்படுத்தியது உச்ச நீதிமன்றம்

புதுச்சேரியில், பா.ஜ.க-வினர் மூன்று பேரை எம்.எல்.ஏ-க்களாக நியமித்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

பாஜக எம்எ;

புதுச்சேரி அரசின் பரிந்துரையின்றி பா.ஜ.க-வைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி என்ற மூன்று பேரையும் எம்.எல்.ஏ-க்களாக நியமித்தது மத்திய அரசு. இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது என்று சபாநாயகர் கொந்தளித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், அவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் ரகசியமாக பதவிப் பிரமாணம் செய்து வைத்து அதிரடி கிளப்பினார் கிரண் பேடி.

புதுச்சேரி பாஜக எம்எம்ஏ

இந்த நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்றது காங்கிரஸ் கட்சி. ஆனால் அங்கு, எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும் என்று தீர்ப்பு வர, உச்ச நீதிமன்றத்தை நாடினர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை எதையும் போடாத உச்ச நீதிமன்றம், பேரவை கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ-க்களை அனுமதிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்ததால் வேறு வழியில்லாமல், ”இது தற்காலிக அனுமதிதான். அதேபோல, சம்பளம் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்களுக்கான சலுகைகள் அவர்களுக்குக் கொடுக்க முடியாது” என்று சொல்லி நியமன எம்.எல்.ஏ-க்களை அனுமதித்தார் சபாநாயகர்.

பாஜக எம்எல்ஏக்கள்

சில நாள்களுக்கு முன்பு, ”நீதிமன்றம் அனுமதித்த காலக்கெடு முடிந்துவிட்டது. பேரவைக்குள் மீண்டும் வர வேண்டும் என்றால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும்” என்றார் சபாநாயகர். இந்த வழக்கின் விசாரணை வரும் 9-ம் தேதி வர இருக்கும் நிலையில், எங்களுக்கு சலுகைகள் வழங்கவில்லை என நியமன எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல, அரசிடம் அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம். இதற்கிடையில், மூன்று எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்தையும் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியது புதுச்சேரி அரசு. இந்நிலையில், ”மத்திய அரசு நியமித்த எம்.எல்.ஏ-க்களின் நியமனம் செல்லும்” என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பாக தீர்ப்பளித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க