`மிகச்சிறந்த போராளி' - `நெல்' ஜெயராமன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்! | political leaders Mourning for nel jayaraman death

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (06/12/2018)

கடைசி தொடர்பு:12:00 (06/12/2018)

`மிகச்சிறந்த போராளி' - `நெல்' ஜெயராமன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

மறைந்த விவசாயி `நெல்' ஜெயராமனின் உடலுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். 

நெல் ஜெயராமன் - ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கம் கிராமத்தைச் சேர்ந்த உழவரும், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடருமான நெல் ஜெயராமன், உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார். பல வருடங்களாக நெல் திருவிழா நடத்தி, பாரம்பர்ய நெல் வகைகள்குறித்து விவசாயிகளிடமும் மக்களிடமும் விழிப்புஉணர்வு ஏற்படுத்தியவர் ஜெயராமன்.

நடிகர் கார்த்தி

இவரது மறைவை அடுத்து, தலைவர்கள் அஞ்சலிசெலுத்திவருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின், டி.டி.வி. தினகரன், ஜி.கே.வாசன், தமிழிசை, முத்தரசன், பி.ஆர்.பாண்டியன், அமைச்சர் காமராஜ், நடிகர் கார்த்தி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், திருமுருகன் காந்தி   உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலிசெலுத்தினர். இதேபோல ராமதாஸ், கமல்ஹாசன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ஸ்டாலின் இரங்கல்

நெல் ஜெயராமனின் மறைவு, ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழிசை

ஜி.கே.வாசன்

மறைந்த நெல் ஜெயராமன், விவசாயத்தின்மீதுகொண்ட பற்றால், நெல் திருவிழா நடத்தி விழிப்புஉணர்வு ஏற்படுத்தியவர் எனப் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், நம்மாழ்வாரின் மாணவரான நெல் ஜெயராமன், மிகச்சிறந்த போராளி என விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பாராட்டியுள்ளார்.

கமல்ஹாசன்

தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்துப் பாதுகாத்த நெல் ஜெயராமனின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பர்ய நெல் போல, அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும்.

ராமதாஸ்

ராமதாஸ்

இயற்கை வேளாண்மைக்கும், பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்பதற்கும் நெல் ஜெயராமன் ஆற்றிய பணிகள்  ஈடு இணையற்றவை. பயன்பாட்டில் இல்லாத நெல் வகைகளை மீட்டெடுத்து, அவற்றை அதிக அளவில் சாகுபடி செய்ய வைப்பதற்காக இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கியவர். யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட 169 வகையான பாரம்பர்ய நெல்வகைகளை இதுவரை அவர் மீட்டெடுத்துள்ளார். நெல் ஜெயராமன் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்தரசன்

தமிழிசை

``நெல் பற்றிய விழிப்புஉணர்வை விதைத்திருக்கிறார் ஜெயராமன். அவரின் குடும்பத்துக்கு அரசு ஊக்கமாகவும், ஆறுதலாகவும் இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க