வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (06/12/2018)

கடைசி தொடர்பு:12:41 (06/12/2018)

சென்னைக் காளிகாம்பாள் கோயிலில் ஶ்ரீபிரத்யங்கிரா மகா யாகம்!

காளிகாம்பாள் கோயில்

ஜகன்மாதா காமாட்சி காளிகாம்பாள் எனும் திருநாமத்துடன் அருள்புரியும் தலம். ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் ஆலயம், சென்னை பாரிமுனையில் உள்ளது. `யாதுமாகி நின்றாய் காளி' என்று மகாகவி பாரதியார் போற்றிப் பாடிய அம்பாள் காளிகாம்பாள். இந்தத் தலத்தில், அம்பாள் புவனேஸ்வரியாக, ராஜராஜேஸ்வரியாக, ராஜமாதங்கியாக, காமாட்சியாக, பத்ரகாளியாகப் பல்வேறு வடிவங்களில் பக்தர்களுக்கு அருளாசி தருகிறாள். தீ வடிவாய்த் தோன்றிய காளி தேவிக்கு உகந்த கார்த்திகை மாதத்தில், காளிக்கு ப்ரீதி ஏற்படவும், உலகில் அமைதி ஏற்படவும் வருடந்தோறும் இந்த ஆலயத்தில், தச மஹா தேவியருடன் பிரத்யங்கிரா தேவியைப் போற்றும் வகையில், ஒன்பது யாக குண்டங்கள் அமைத்து,  10 நாள்கள், 18  வேளைகளில்,  10 லட்சம் ஜபம் செய்து,  10 லட்சம் ஜபத்துக்கு ஒரு பங்கு என்ற அளவில் ஒரு லட்சம் ஆஹுதிகள் அக்னியில் சமர்ப்பிக்கப்பட்டன. பெருஞ்சாந்தி முறையில் `மஹா சாந்திக மாத்ரு யக்ஞம்' என்ற பெயரில் இந்த யாகம் நடைபெற்றுவருகிறது.

யாகம்


 நவம்பர் 25- ம் தேதி தொடங்கப்பட்ட இந்த மஹா யாகம், இன்று (டிசம்பர் - 6) நண்பகல் 2 மணி அளவில் நிறைவடைகிறது. 

யாகம்

இந்த நிகழ்ச்சியைப் பற்றி சிவஸ்ரீ காளிதாச சிவாச்சார்யர், ``இந்தப் பெருவேள்வி செய்யப்படுவதால் உலகிற்கு அமைதி, அன்பு, வளம், செழிப்பு ஆகியவை பெருகும். பாவங்கள், தோஷங்கள், துயரங்கள், குறைகள், நோய்கள் விலகும். இந்த யாகத்தை தரிசிப்பதன்மூலம் சகல விதமான தோஷங்களும் விலகி, அனைத்து பாக்யங்களும் ஏற்படும். ப்ரத்யங்கிராதேவி தசமஹாமாத்ரு யக்ஞத்தின் மகத்தான பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க