வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (06/12/2018)

கடைசி தொடர்பு:15:16 (06/12/2018)

``களங்கம் கற்பித்து சொத்துகளை அபகரிக்க முயற்சி!'' - புகார் கிளப்பும் சிந்துவின் அம்மா

என் மீதும் திருமணம் ஆகாத என் மகள் மீதும் களங்கம் ஏற்படுத்தி என் சொத்துகளைப் பிரிக்க சிலர் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் கணேசன் புகார் கொடுத்துள்ளார். 

சிந்து

``எம்.பி-க்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறது’’ எனத் தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் கொளுத்திப்போட்ட தீ பற்றியெரிந்தது. சிந்து என்ற பெண்ணுக்குப் பிறந்த குழந்தை அமைச்சர் ஜெயக்குமாருடையது என்கிற சர்ச்சை எழுந்தபோது சிந்து மீதும் அவரின் தாய் சாந்தி மீது நிறைய புகார்கள் படிக்கப்பட்டன. அதில் ஒரு குற்றச்சாட்டுதான் ``வழக்கு பீஸ் தராமல் ஏமாற்றி கொலை மிரட்டல் விட்டார்’’ எனச் சாந்தி மீது கணேசன் என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரும். இது தொடர்பாகக் கடந்த 29-ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சாந்தி புகார் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதன் விவரம் இப்போது தெரியவந்திருக்கிறது. 

அந்தப் புகாரில், `24.10.2018 அன்று என் மீதும் என் மகள் சிந்து மீதும் வழக்கறிஞர் கணேசன் பொய் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். நாங்கள் ஊதியம் தரவில்லை என்றும் அதுபற்றி அவர் கேட்டபோது பாலியல் புகார் கொடுப்பேன் என நாங்கள் கூறியதாகவும் கணேசன் சொல்லியிருக்கிறார். இதுதொடர்பாக எங்களிடம் போலீஸ் விசாரிக்காத நிலையில் அதுபற்றி செய்திகள் வெளியாகின. உடனே 3 காவல் நிலையத்தில் இதுபற்றி விசாரித்தேன். எதிர்மனுவும் கொடுத்தேன். அதை ஆய்வாளர் எடுத்துக்கொள்ளவில்லை.

புகார் கடிதம்

காவல் நிலையத்தில் விசாரித்தபோதுதான் அந்த வழக்கறிஞர் யார் என்பது தெரியவந்தது. என் வீட்டை 2013-ல் வாடகைக்குக் கொடுத்த விவகாரம் சம்பந்தமாக எங்களுக்கும் சென்ட்ரல் பேங்க் மேலாளர் சுனந்தா ராவுக்கும் நடந்த விவகாரத்தில் எதிர் மனுதாரருக்கு வந்த வழக்கறிஞர்தான் கணேசன். பேங்க் மேலாளர் மீது நான் எந்தப் புகாரும் சொல்லவில்லை. இது முழுக்க முழுக்க பொய்ப் புகார். என் மீதும் திருமணம் ஆகாத என் மகள் மீதும் களங்கம் ஏற்படுத்தி என் சொத்துகளை பிரிக்கச் சிலர் தூண்டுதலில் பேரில் கொடுத்த புகார். இதை விசாரித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க