`ராஜஸ்தான் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதானவர்களுக்காக வாதாட மாட்டோம்!’ - கும்பகோணம் வக்கீல்கள் | Kumbakonam lawyers decision over rajasthan woman rape case

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (06/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (06/12/2018)

`ராஜஸ்தான் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதானவர்களுக்காக வாதாட மாட்டோம்!’ - கும்பகோணம் வக்கீல்கள்

வடமாநில பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான குற்றவாளிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் கும்பகோணம் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகி வழக்கை நடத்துவதில்லை என வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகக் கூடாது என்ற கோரிக்கையும் வைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

டெல்லியில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரியும் ராஜஸ்தானைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கும்பகோணத்தில் உள்ள அதே வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொள்வதற்காக கடந்த 2-ம் தேதி இரவு ரயில் மூலம் கும்பகோணம் வந்துள்ளார். அவரை  தினேஷ், வசந்த், புருஷோத்தமன், அன்பரசு என்ற 4 இளைஞர்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீஸார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்களுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாலியல் பலாத்காரம்

இந்த நிலையில், கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் நடைபெற்ற ஆலோசனையில் பணி நிமித்தமாக கும்பகோணம் வந்த வடமாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கும்பகோணம் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அந்த இளைஞர்களுக்கு ஆதரவாக கும்பகோணம் வழக்கறிஞர்கள் யாரும் இந்த வழக்கில் ஆஜராகக் கூடாது என வலியுறுத்தி ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய முடிவெடுத்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகக் கூடாது என அனைத்து வழக்கறிஞர் சங்கங்களையும் கேட்டுக்கொண்டு தீர்மானமும் நிறைவேற்றினர். பின்னர் நீதிமன்றப் பணிகளை வழக்கறிஞர்கள் புறக்கணித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க