வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (06/12/2018)

கடைசி தொடர்பு:20:40 (06/12/2018)

ரவுடி வரிச்சியூர் செல்வம் மோசடி வழக்கில் கைது!

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், மோசடி வழக்கில் இன்று மதுரையில் கைது செய்யப்பட்டார்.

ரவுடி வரிச்சியூர் செல்வம்

உடலெங்கும் தங்க நகைகளை அணிந்துகொண்டு நடமாடும் நகைக்கடைபோல மதுரை வாட்டரத்தில் வலம் வந்து கொண்டிருந்த  வரிச்சியூர் செல்வம் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்று வந்தவர். மூன்று முறை என்கவுன்டரிலிருந்து கடைசி நேரத்தில் தப்பித்துள்ளார். `தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை திருந்தி வாழ்கிறேன்’ என்று வரிச்சியூர் செல்வம் சொல்லி வந்தாலும், மறைமுகமாக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் கூறி வருகிறார்கள். இடையில் சர்வதேச மனித உரிமை அமைப்பில் நிர்வாகியாக இருந்தவர், சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு நடித்தும் வந்தார். 

கைது

தான் கொடுத்த கடன் ரூ.3 கோடியை வசூலித்து தரும்படிபடி வரிச்சியூர் செல்வத்தை சென்னையைச் சேர்ந்த மெர்லின் தாமஸ் என்பவர் அணுகியுள்ளார். அதற்காக ரூ.5 லட்சமும், ஒரு காரையும் வரிச்சியூர் செல்வம் பெற்றுள்ளார். ஆனால், சொன்னபடி பணத்தை வசூலித்து தரவில்லை. அதனால் கொடுத்த பணத்தையும், காரையும்  திருப்பிக் கேட்டதால் வரிச்சியூர் செல்வம் மிரட்டியதாக மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் மெர்லின் தாமஸ் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து வரிச்சியூர் செல்வத்தைக் கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தியபிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க