வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (06/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (06/12/2018)

`கேரள முதல்வருக்கு எதிராக #Gobackபினராயி போராட்டம்!’- அர்ஜுன் சம்பத்

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அடாவடிதனத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

அர்ஜுன் சம்பத்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ``எங்களது மகளிரணியினர், 50 இளம்பெண்களை சபரிமலைக்கு கூட்டிச்செல்வதாக கேரளா ஊடகங்கள் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். உளவுத்துறை கூறியதாக இப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். இந்து மக்கள் கட்சி சபரிமலையின் புனிதம் காக்க பல வருடங்களாக உழைத்து வருகிறது. மேலும், ரெஹனா பாத்திமா, ஸ்வீட்டி மேரி போன்றவர்களை சபரிமலைக்குச் செல்ல வைத்து அதன் புனிதத்தைக் கெடுக்க கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அடாவடித்தனம் செய்து வருகிறார். இதை எதிர்த்து, நாங்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகிறோம்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

அதனால்தான், எங்களை ஒடுக்க இப்படி ஒரு பொய்ப் புகாரை பரப்பி வருகிறார். தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் உருவச்சிலை திறப்புக்கு வருகை தரும் பினராயி விஜயனுக்கு எதிராக, GoBack பினராயி என்று போராட்டம் நடத்த உள்ளோம். மேலும், பிற மதங்களைச் சார்ந்தவர்களை சபரிமலைக்கு அனுமதிப்போம் என்பதை தமிழக பெண்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பினராயி விஜயனின் அடாவடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம். இந்து மக்கள் கட்சி, பெண்கள் சபரிமலையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என 30 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கியுள்ளோம். தவறான தகவலை பரப்பும் பினராயி விஜயனுக்கு எங்களது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.