நகையைக் கண்டுபிடித்தார்; பின்னர் பதுக்கிவிட்டார்! - சிக்கிக்கொண்ட கோட்டாறு இன்ஸ்பெக்டர் | Fir against kottaru Inspector

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (07/12/2018)

கடைசி தொடர்பு:15:19 (07/12/2018)

நகையைக் கண்டுபிடித்தார்; பின்னர் பதுக்கிவிட்டார்! - சிக்கிக்கொண்ட கோட்டாறு இன்ஸ்பெக்டர்

ரசு ஊழியர் வீட்டில் திருடிய கொள்ளையனிடமிருந்து நகைகளைப் பறிமுதல் செய்துவிட்டு, அதை சம்பந்தப்பட்டவரிடம் வழங்காத இன்ஸ்பெக்டர் மீது குமரி லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ்

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை கல்லுக்கட்டி பகுதியைச் சேர்ந்தவர், வேதவியாசன். இவர், தூத்துக்குடியில் அரசுத் துறையில் ஊழியராகப் பணிபுரிந்துவருகிறார். கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு, வேதவியாசன் வீட்டில் கொள்ளை நடந்திருக்கிறது. அதில், நகை மற்றும் பணம் திருடு போயிருக்கிறது. இதுகுறித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். களியக்காவிளை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய அன்புபிரகாஷ்,  கொள்ளைபோன நகைகளை மீட்டதாகவும், அதைத் தன்னிடம் வழங்கவில்லை என்றும் வேதவியாசன் நாகர்கோவில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

நகைகள்

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த மனுமீது முகாந்திரம் இருந்தால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மீது நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத தெரிகிறது.  இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மதியழகனிடம் பேசியபோது, ''இன்ஸ்பெக்டர் மீது வழக்குபதிவு செய்யவில்லை'' என்றார்.

அன்புபிரகாஷ் இப்போது, கோட்டாறு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்துவருகிறார். இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்த விவகாரம் இப்போது வெளியே வந்துள்ளதால், காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.