``தப்புப் பண்றவங்க அதுக்கான பலனை அனுபவிப்பாங்க'' - விரக்தியில் நடிகர் விஜயகுமார் | Actor Vijayakumar reveals his angry on his daughter Vanitha

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (07/12/2018)

கடைசி தொடர்பு:15:20 (07/12/2018)

``தப்புப் பண்றவங்க அதுக்கான பலனை அனுபவிப்பாங்க'' - விரக்தியில் நடிகர் விஜயகுமார்

``சட்டப்படி என்ன செய்யணுமோ, அதை செஞ்சுக்கிட்டிருக்கேன். இதுக்கு மேலே பேட்டி கொடுக்கவும் விருப்பமில்லை ''

வனிதா

சில மாதங்களுக்கு முன்னால், சென்னை ஆலப்பாக்கத்தில் இருக்கிற தன்னுடைய வீட்டில், ஷூட்டிங் நடத்துவதற்காக வந்த மகள் வனிதா, அதன் பிறகு அந்த வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறார் என்று காவல்துறையில் புகார் அளித்திருந்தார் நடிகர் விஜயகுமார். இதைத் தொடர்ந்து, வனிதாவையும் அவருடைய நண்பர்களையும் காவல்துறையினர் அந்த வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்னால், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று, வனிதா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டது. 

விஜயகுமார்

இந்த நிலையில், நேற்று மறுபடியும், வனிதா ஆலப்பாக்கத்தில் இருக்கிற வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். இது தொடர்பாக நடிகர் விஜயகுமாரிடம் கருத்து கேட்டோம்.

``தப்புப் பண்றவங்க அதுக்கான பலனை அனுபவிப்பாங்க. நான், வேற என்ன சொல்றது? சட்டப்படி என்ன செய்யணுமோ, அதைச் செஞ்சுக்கிட்டிருக்கேன். இதுக்கு மேலே இதைப் பத்தி பேட்டியெல்லாம் கொடுக்க எனக்கு விருப்பம் இல்லைங்க'' என்று வருத்தமாகச் சொன்னார். வனிதாவிடம் அவர் தரப்பு கருத்தைக் கேட்பதற்காக, தொடர்ந்து முயற்சி செய்தால், அவர் போன் தொடர்ந்து ஸ்விட்ச் ஆஃப் நிலையிலேயே இருந்து வருகிறது!