வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (07/12/2018)

கடைசி தொடர்பு:18:40 (07/12/2018)

`அன்று நன்னீரை கொடுத்தது; இன்று செப்டிங் டேங்காக மாறிவிட்டது!'- மணிமுத்தாறு அவலம்

மனிதனின் பேராசையே நிலத்தையும், நீர்வளத்தையும் கெடுக்கிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சேலத்தில் பாய்ந்தோடும் மணிமுத்தாற்றைச் சொன்னால் மிகப்பொருத்தமாக இருக்கும். 

மணிமுத்தாறு

சேர்வராயன் மலை வடமேற்கில் இருந்து வடகிழக்கு வரை நீண்டு செல்கிறது. இந்த மலையின் அடிவாரப்பகுதியில்தான் சேலம் அமைந்துள்ளது. இதன் தென்பகுதியில் ஜருகு மலை, ஊத்து மலை, நாமமலைகள் உள்ளன. வடபகுதியில் பெருமாள் மலை உள்ளது. 
சைலம் என புராதனப் பெயர் கொண்ட சேலத்தின் நீராதாரம் இந்த மலைகள்தான். ஆயிரக்கணக்கான அருவிகள் இந்த மலைகளில் இருந்தே ஊற்றெடுக்கின்றன. சேர்வராயன்மலையின் தென் பகுதியில் ஏற்காடு அமைந்துள்ளது. இங்கிருந்துதான் திருமணிமுத்தாறு ஆறு உற்பத்தியாகி சேலம் மையப்பகுதிக்கு வருகிறது. 

மணிமுத்தாறு

இங்கிருந்து உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 70 மைல்களுக்கும் மேல் ஓடி, பரமத்திவேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கிறது. இந்த மணிமுத்தாற்றில் குகை, பஞ்சந்தாங்கி ஏரி, சக்கிலி ஏரி வாய்க்கால் என எட்டு வாய்க்கால்களும், நகரமலை, போதமலை, ஜருகுமலை ஆறு என 6 ஆறுகள் ஓடின.

மணிமுத்தாறு

திருமணிமுத்தாற்றின் வடிநிலப்பரப்பு 700 சதுர மைல் பரப்பளவு. ஆற்றில் 25 அணைகள் கட்டப்பட்டுள்ளன.  இதன் மூலமாகக் கரும்பு, பருத்தி என விளைவிக்கப்பட்டுச் செழிப்பாக இருந்தன. ஆற்றின் கரையோரப் பகுதிகள் வளமானது என்பதால் வற்றாத ஜீவ நதியாக மணிமுத்தாறு விளங்கியது. இங்கிருந்தே இரும்பு தாது, மெக்னசைட் உள்ளிட்ட தாதுகள் கிடைத்து வந்தன. இது சேலத்தின் ஆங்கில எழுத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இதற்கெல்லாம் உலை வைக்கும் விதமாகக் கடந்த 2,000 ஆண்டுக்குப் பிறகு திருமணிமுத்தாற்றின் கரைகளை சிமென்ட் பூச்சு பூச அபிவிருத்தித் திட்டம் எனும் ஒரு திட்டத்தைப் போட்டு நதியோரக் கரைப் பகுதிகளில் சிமென்ட் கலவையை பூசி வாய்க்கால் வெட்டினார்கள். 

மணிமுத்தாறு

இதனால் மண்ணுக்கும் நதிக்கு இருந்த தொடர்பு அற்றுப்போய்விட்டது. அன்றையிலிருந்து இன்று வரையில் இந்த ஆற்றில் நல்ல நீரே செல்லவில்லை.

மணிமுத்தாறு

சேலம் பழைய பேருந்து நிறுத்தம் அருகே கோட்டை மாரியம்மன் கோயில் அருகே செல்கிறது மணிமுத்தாற்றின் வாய்க்கால் பகுதி. சேலம் நகரப் பகுதியில் மட்டும் 5 கிலோ மீட்டர் செல்கிறது. இது முழுவதிலும் ஹோட்டல்கள், வீடுகள், சாயக்கழிவுகள், வாட்டர் சர்வீஸ் செய்யும் கடைகளில் உள்ள கழிவு நீரைத் தினந்தோறும் இதில் விடுகின்றனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகளில் இருந்து மலத்தை நேரடியாகச் சாக்கடையில் விடுகிறார்கள். இதனால், சேலம் நகர மக்களுக்கு நன்னீரை வழங்கி வந்த மணிமுத்தாறு இன்று சாக்கடையாக, கழிவுகள் நிரம்பிய செப்டிங் டேங்காக மாறிவிட்டது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க