`வேறு இடத்தைத் தேர்வு செய்திருக்கலாமே?’ -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சிக்குத் தடைவிதித்த நீதிமன்றம் | Madurai HC puts interim stay over srisri ravishankar's event in Tanjore temple premises

வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (07/12/2018)

கடைசி தொடர்பு:17:14 (07/12/2018)

`வேறு இடத்தைத் தேர்வு செய்திருக்கலாமே?’ -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சிக்குத் தடைவிதித்த நீதிமன்றம்

புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நடத்தவிருந்த நிகழ்ச்சிக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

பழைமைவாய்ந்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயில் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இக்கோயிலின் புரதான அடையாளங்கள் சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக எந்தவொரு தனியார் நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.

தஞ்சை பெரிய கோயில்

இந்த நிலையில் வாழும் கலை அமைப்பை நடத்தும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், `அன் வில்லிங் இன்பினிடி' என்ற நிகழ்ச்சியைக் கோயில் வளாகத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்தார். மத்தியை தொல்லியல் துறையும் அனுமதி அளித்திருந்தது. இதற்காக பெரிய அளவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டன. கோயிலின் தொன்மையும் புனிதமும் கெடுகிறது என்று ஆன்கிக மக்களைக் கவலைகொள்ள வைத்தது. 

தஞ்சை பெரிய கோயில்

இந்தநிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர், ``ஸ்ரீஸ்ரீரவிசங்கர் யமுனை ஆற்றங்கரையில் நடத்திய நிகழ்ச்சியில் நதியை மாசுபடுத்தியதாக 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டவர். இந்தநிலையில் புகழ்வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலிலும் நிகழ்ச்சி நடத்துகிறார். இதற்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதிகள், ``புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சியை நடத்துவது ஏன்? அதற்கு வேறு இடங்களைத் தேர்வு செய்திருக்கலாமே? கோயில்களில் தீப்பிடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், அரங்குகள் அமைத்தது ஏன்? இந்நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்படுகிறது. இவை அனைத்தையும் அப்புறப்படுத்தி தஞ்சை மாவட்ட நிர்வாகம் 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க