காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு! - கணக்கில் வராத ரூ.15,000 பறிமுதல் | vigilance raid in kanchipuram Government Hospital

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (07/12/2018)

கடைசி தொடர்பு:20:10 (07/12/2018)

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு! - கணக்கில் வராத ரூ.15,000 பறிமுதல்

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத 15,000 ரூபாயை ஊழியர்களிடம் இருந்து கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள். 

லஞ்ச ஒழிப்புத்துறை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து மருத்துவ ஊழியர்கள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார் எழுந்துவந்தது. இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புth துறை டி.எஸ்.பி சிவபாதசேகரன் தலைமையில் 15 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மருத்துவமனையிலுள்ள பிரசவ வார்டு, ஸ்கேன் சென்டர், எக்ஸ்ரே பிரிவு, விபத்து பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை

இந்தth திடீர் சோதனையில் பிரசவ வார்டு, ஸ்கேன் செனட்டர், எக்ஸ்ரே பிரிவு, விபத்து பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்களிடமிருந்து சுமார் ரூ.15,000 ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையின்போது செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் போன்ற பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. கடந்த ஒரு வாரம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. இதில் 41,000 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோல் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்த வேண்டும். அப்போதுதான் லஞ்சம் ஓரளவுக்காவது குறையும் எனப் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.