சென்னை மெட்ரோவுக்கு கூடுதல் ரயில்கள் | Metro Rail Flagging off event of TS 42 at Alstom Factory, Sri City

வெளியிடப்பட்ட நேரம்: 22:45 (07/12/2018)

கடைசி தொடர்பு:22:45 (07/12/2018)

சென்னை மெட்ரோவுக்கு கூடுதல் ரயில்கள்

சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்துக்கு கூடுதலாக 10 ரயில்களைத் தயாரிக்கும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. சென்னை பேருந்து, ரயில் கட்டணத்தைவிட மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருந்ததால் முதலில் குறைவான பயணிகளே அதில் பயணித்தனர். சமீபத்தில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தால் மெட்ரோ ரயிலில் கூட்டம் கூடியது. சென்னை, கொச்சி, மும்பை ஆகிய இந்திய நகரங்களில் ஓடும் மெட்ரோ ரயிலை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆல்ஸ்டோம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தியாவில், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் ஆல்ஸ்டோம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்துக்கு கூடுதலாக 10 ரயில்களைத் தயாரிக்கும் ஒப்பந்தம் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ

இந்த நிறுவனம் கொச்சி, மும்பை, பிரேசில், சிட்னி ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரயிலைத் தயாரித்து அனுப்பிவருகிறது. சிட்னி நகரத்துக்குத் தயாரிக்கப்பட்ட 22 மெட்ரோ ரயில்கள், ஸ்ரீசிட்டியில் அமைந்துள்ள ஆல்ஸ்டோம் நிறுவனத்தின் முதல் வெளிநாடு ஏற்றுமதியாகும். இந்த ரயில்கள் அனைத்தும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. ஆல்ஸ்டோம் நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு ஸ்ரீ சிட்டியில் தனது உற்பத்தியைத் தொடங்கியது. 2014-ல் சென்னை மெட்ரோவுக்கான முதல் ரயிலை தயாரித்து வழங்கியது. சிட்டி அனுப்பப்பட்ட ரயில்கள் ஸ்ரீசிட்டியில் தயாரிக்கப்பட்ட 42-வது ரயிலாகும். சென்னை மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்துக்குக் கூடுதலாக 10 ரயில்களைத் தயாரிக்கும் ஒப்பந்தம் இந்த நிறுவனத்துக்குக் கிடைத்துள்ளது. இந்த ரயில்கள் அனைத்து 2020-ம் ஆண்டு தயாரித்து அனுப்பப்படும் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.