பக்கத்து வீட்டுக்காரரைக் கீழே தள்ளிவிட்டவருக்கு 7 வருட சிறைத்தண்டனை! | 7 years jail for a man who killed neighbour

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:12:09 (08/12/2018)

பக்கத்து வீட்டுக்காரரைக் கீழே தள்ளிவிட்டவருக்கு 7 வருட சிறைத்தண்டனை!

பக்கத்து வீட்டுக்காரரைக் கீழே தள்ளிவிட்டவருக்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்து தேனி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறை

தேனி மாவட்டம் போடி ரெங்கநாதபுரம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அதிகாரி. இவருக்கும், பக்கத்துவீட்டுக்காரரான கோபால் என்பவருக்கும் இடையே கடந்த 2015-ம் வருடம் செம்டம்பர் 21-ம் தேதி சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், அதிகாரியை, கோபால் கீழே தள்ளிவிட்டுள்ளார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அதிகாரி பலியானார்.

அதிகாரியின் மனைவி பாப்பாத்தி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த போடி தாலுகா காவல்துறையினர், கோபாலை கைது செய்தனர். இவ்வழக்கானது தேனி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில், விசாரணை முடிந்து, கோபாலுக்கு 7 வருட சிறைத்தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் அபராதத் தொகையைக் கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாத சிறைத்தண்டனையும் விதித்து தேனி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சீனிவாசன் தீர்ப்பளித்தார்.