சசிகலாவை நேரில் ஆஜர்படுத்துங்கள்..! - பெங்களூரு சிறை நிர்வாகத்துக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு | Sasikala to appear Egmore Court on foreign exchange fraud case

வெளியிடப்பட்ட நேரம்: 09:03 (08/12/2018)

கடைசி தொடர்பு:11:41 (08/12/2018)

சசிகலாவை நேரில் ஆஜர்படுத்துங்கள்..! - பெங்களூரு சிறை நிர்வாகத்துக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை நேரில் ஆஜர்படுத்தும்படி கூறியிருக்கிறது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.

சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. ஒன்றரை வருடத்துக்கும் மேலாகச் சிறையில் இருக்கிறார். இதற்கிடையில், சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராசன் உடல் நலக்குறைவால் கடந்த மார்ச் மாதம் சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகச் சிறையிலிருந்து சசிகலா பரோலில் வந்தார். ஆனால், பரோல் காலம் முடிவதற்கு முன்பாகவே அவர் சிறைக்குச் சென்றுவிட்டார். 

சென்னை எழும்பூர் நீதிமன்றம்

எனினும், டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சசிகலாவைச் சிறையில் போய்ப் பார்த்து வந்தனர். இதற்கிடையே, `சசிகலா மீண்டும் பரோலில் வரப்போகிறார்' என்கிற தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராவதற்காகக்கூட அவர் வரலாம் என்கிற தகவல் வெளியானது.

 ஆனால், அதை ஆணையம் மறுத்த நிலையில், வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக அவர் வெளியே வருகிறார் எனக் கூறினார் கிருஷ்ணபிரியா. இந்நிலையில், அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை நேரில் ஆஜர்படுத்தும்படி கூறியிருக்கிறது சென்னை எழும்பூர் நீதிமன்றம். 

பரப்பன அக்ரஹாரா சிறை

தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்தாக அந்நிய செலாவணி மோசடி பிரிவில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஆஜராவதற்காகவே, வரும் 13-ம் தேதி நேரில் அழைத்து வர வேண்டும் எனப் பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க