வெளியிடப்பட்ட நேரம்: 10:59 (08/12/2018)

கடைசி தொடர்பு:11:10 (08/12/2018)

`நாணயம் விகடன்’ பிசினஸ் கான்க்ளேவ்! சென்னையில் தொடங்கியது

`நாணயம் விகடன்’ சார்பில் சென்னையில், டிசம்பர் 8, 15, 16-ம் தேதிகளில் `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் நாளான இன்று `பிசினஸ் அண்ட்  ஃபைனான்ஸ் கான்க்ளேவ்’ சென்னை தாஜ் ஹோட்டலில் தொடங்கியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், அமேசான் டிஜிட்டல் ஆப் கேம்ஸ் சர்வீஸஸ் குரூப் இயக்குநரான மணிகண்டன் தங்கரத்னம், 'டெக்னாலஜி கேட் டு ஃப்யூச்சர்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

மணிகண்டன் தங்கரத்னம், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் நிறுவனத்தின் ஆப் தயாரிப்புகளில் 15 ஆண்டுக்கால அனுபவம்மிக்கவர். ஆப் உருவாக்கத்தில் தொடக்க டிசைன் முதல் இறுதிவரை முழுமையான பங்களிப்பு செலுத்தக்கூடியவர். டெக்னாலஜி மீது தீராத காதல் கொண்டவர்.

நாணயம் விகடன்

இதன்மூலம் பொதுமக்களுக்கு பல நன்மைகளை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்பட்டுவருபவர். இளம் கணினிப் பொறியாளர்களோடு இணைந்து பணியாற்றுவதிலும், அவர்களை வழிநடத்துவதிலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். கணினித்துறை சார்ந்த தொழில்முனைவோருக்கு, சர்வதேச அளவில் பெரிய தொழில் வாய்ப்புகள் பெருகிவருகின்றன.

கான்க்ளேவ்

குறிப்பாக, அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தக உலகம் பெரிய அளவில் வளர்ச்சிகண்டு வருகிறது. இந்த வர்த்தகத் துறையில் தொழில்வாய்ப்புகளை எப்படிக் கையாளுவது, எந்த மாதிரியான ஆப்களுக்கு எதிர்காலத்தில் வரவேற்பு இருக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொள்ள, இளம் தொழில்முனைவோருக்கு இவரது சிறப்புரை பயனுள்ளதாக இருக்கும்.

கூட்டத்தில் முதலாவதாக நேச்சுரல் சலூன் & ஸ்பாவின் உரிமையாளர் சி.கே.குமரவேல் தனது உரையைத் தொடங்கினார். அதில், ``உங்களின் புகைப்படத்தை சுவரில் ஒட்டி தனி மனிதன் ஒருவனால் மாற்றத்தை உருவாக்க முடியும் என எழுதி வையுங்கள். எதை நீங்கள் மீண்டும் மீண்டும் செய்கிறீர்களோ அது உங்கள் சப் கான்சியசில் பதியும்" என்று பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க