வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (08/12/2018)

கடைசி தொடர்பு:13:03 (08/12/2018)

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம்! - ராமநாதபுரத்தில் பரபரப்பு

 ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மருத்துவமனையில் இருந்து தப்பிய விசாரணை கைதி
 

ராமநாதபுரம் மாவட்டம் சனவேலியைச் சேர்ந்த ஜோதிடர் சங்கரபாண்டியன், நேற்று தினம் மதியம் இவர் வீட்டு கதவு திறந்து கிடந்தது. வெளியே சென்றிருந்த சங்கரபாண்டியன் வீடு திரும்பியபோது, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கையில் அரிவாளுடன் சங்கரபாண்டியன் வீட்டில் இருந்து தப்ப முயன்றார். அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வாலிபரை சரமாரியாகத் தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாகத் தனது வீட்டில் இருந்த 13 பவுன் நகை, ரொக்கம் திருடு போனதாக போலீஸாரிடம் சங்கரபாண்டியன் புகார் தொடுத்தார். இதன்படி ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் காயமடைந்த வாலிபர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் சந்தோஷ் குமார் 28 எனத் தெரிந்தது.

கைதி
 

 ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி சென்றபோது இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள கண்மாய் சென்று திரும்பிய தன்னை அடையாளம் தெரியாத கும்பல் கட்டி வைத்து கண்ணில் மிளகாய்ப்  பொடி தூவி சரமாரியாகத் தாக்கியதாக சந்தோஷ்குமார் புகார் கொடுத்தார். இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி விசாரித்து வருகிறார். இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த சந்தோஷ்குமார் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பில் இருந்தார். இன்று அதிகாலை சந்தோஷ்குமார் கழிப்பறை செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.