``பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதா?’’ - தி.மு.க காங்கிரஸ் மீது பாயும் பொன்னார் | Pon.Radhakrishnan attacks DMK and Congress

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (08/12/2018)

கடைசி தொடர்பு:13:30 (08/12/2018)

``பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதா?’’ - தி.மு.க காங்கிரஸ் மீது பாயும் பொன்னார்

காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சிகள் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் தி.மு.க கட்சிகள் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவதாகப் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சரும் தமிழக பி.ஜே.பி மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் இன்று கோவை வந்திருந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழக முதல்வர் ஒரு காரியத்தை செய்யத் தவறியிருக்கிறார். முதல் தீர்மானமாகத் மேக்கேதாட்டூ விஷயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் கட்சியினரைப் பெங்களூர் அனுப்பிப் பேசச் சொல்லியிருக்க வேண்டும். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பழக்கத்தை தற்போதும் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி செய்துகொண்டுள்ளது. 

ஸ்டாலின்

நிவாரண நிதியாக ஒரு பைசாகூட வரவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியது எந்த அளவுக்கு அது உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. மத்திய குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்றும் எனக்குத் தெரியவில்லை. மோடியின் உடை குறித்தும், வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்தும் வைகோ பேசியிருக்கிறார். பிறந்தது முதல் ஒரே உடையில்தான் வாழ்கிறார்களா? உடைகளைப் பற்றி பேசுவதற்குத் தமிழக அரசியல்வாதிகளுக்குத் தகுதி என்பதே கிடையாது. மோடி எளிமையான மனிதர். ராமர் பிள்ளை விவகாரம் நீண்ட காலமாக உள்ளது. ஆதாரபூர்வமாக உள்ள நிலையில் அது குறித்துப் பேச தயாராகத்தான் உள்ளோம். எதையும்  உதாசீனப்படுத்தத் தயாராக இல்லை. கோவையில் ஜெ. சிலையிடம் மனு கொடுத்ததில், ஏ.பி.வி.பி செயல் தவறுதான். கழகங்கள் செய்வது போல, சிலையிடம் ஏன் இவர்கள் மனு கொண்டு கொடுக்க வேண்டும். மாணவர்கள் தெரியாமல் செய்துள்ளனர்” என்றார்.