மலைக் கிராமங்கள் அருகே கூட்டம் கூட்டமாக வந்த யானைகள் - வனத்துக்குள் விரட்ட முயற்சி! #கோவை | Coimbatore: Elephants enters near Somaiyampalayam

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (08/12/2018)

கடைசி தொடர்பு:13:50 (08/12/2018)

மலைக் கிராமங்கள் அருகே கூட்டம் கூட்டமாக வந்த யானைகள் - வனத்துக்குள் விரட்ட முயற்சி! #கோவை

கோவையில் மலை கிராமங்களின் அருகே வந்த 12 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் மலை கிராமங்களின் அருகே வந்த 12 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

காட்டு யானைகள்

கோவை மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமங்கள் அருகே இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடிக் காட்டு யானைகள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இந்நிலையில், சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் நேற்று இரவு கூட்டமாக நுழைந்தன. குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளின் அருகே யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வந்ததால் அந்தப் பகுதியில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

யானை

இதையடுத்துத் தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளைப் பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர். யானைகள் கூட்டம் குடியிருப்புப் பகுதிகளை கடந்து, ஓர் முள் காட்டில் நின்றுள்ளன. அந்த யானைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர், யானைகளை விரட்டப் போராடி வருகின்றனர். இதேபோல துடியலூர் அருகே அப்பநாய்க்கன்பாளையத்திலம் 3 காட்டு யானைகள் நுழைந்துள்ளன. அவற்றையும் பட்டாசுகள் மூலம் காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.