வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (08/12/2018)

கடைசி தொடர்பு:16:06 (08/12/2018)

`இந்தியாவில் இதுவே முதல்முறை!’ - ஆரோக்கியமான சோயா மோர் வழங்கும் கரூர் உணவகம்

      

 நளன் ஹோட்டல்

பாலில் இருந்து தயாரிக்கப்படும் மோர் செரிமானம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் சோயாவில் இருந்து மோர் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது கரூரைச் சேர்ந்த ஒரு ஹோட்டல் நிர்வாகம்.

கரூர் பழைய பைபாஸ் சாலையில் அமைந்திருக்கிறது நளன் என்ற பெயரிலான ஹோட்டல். சித்தர்கள் வகுத்த உணவே மருந்து என்ற அடிப்படையில் இங்கே உணவு தயாரிக்கப்படுகிறது. ரசாயனங்கள் பயன்படுத்தாத இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், தானியங்கள், கீரைகளைக் கொண்டு உணவு தயார் செய்யப்படுகிறது. குருஜி என்பவருக்குச் சொந்தமான இந்த ஹோட்டலில்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக சோயாவிலிருந்து மோர் தயாரித்து வழங்குகிறார்கள்.




சோயா மோர்


இதுசம்பந்தமாக, நம்மிடம் பேசிய தனபால்(ஹோட்டல் நிர்வாகி)நளன் ஹோட்டல் நிர்வாகி தனபால்,
``பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்டவற்றை பலர் பயன்படுத்த முடியாது. செரிமான பிரச்னைகள் உள்ளவர்கள், இதய பிரச்னைகள் உள்ளவர்கள் பயன்படுத்த முடியாது. அதனால், நாங்க பாலில் இருந்து மோர் தயாரித்து பயன்படுத்த விரும்பலை. சோயாவிலிருந்து மோர் தயாரிக்கும் புதிய முறையை நாங்க கொண்டு வந்தோம். இந்திய அளவில் வேறு யாரும் இப்படி சோயாவிலிருந்து மோர் தயாரிக்கவில்லை. எங்க குருஜியின் உடல் நலன் சார்ந்த உணவு கண்டுபிடிப்பு விஷயங்களில் இதுவும் ஒன்று. சோயாவை முதல்நாள் மாலையே தண்ணீரில் ஊர வச்சுடணும். மறுநாள் காலையில் அதைக் கைகளால் தேய்க்கணும். அப்போ சோயாவில் உள்ள தோல் தனியா உரிஞ்சி வந்துடும். தோல் அகற்றப்பட்ட எஞ்சிய சோயாவை நல்லா கொதிக்க வைக்கணும். பிறகு, அதை ஆறவிடணும். அதன் பிறகு, அதை பிசைஞ்சு தேவையான அளவு தண்ணீர் ஊத்துனா, சோயா மோர் தயார். அதுல புளிப்புக்காகக் கொஞ்சம் எலுமிச்சை சாறு, டேஸ்ட்டுக்காக கொத்தமல்லி, கறிவேப்பிலை இலைகள் கூடவே இஞ்சி சாறுன்னு சேர்த்துக்கலாம். பால் மோரைவிட இது நல்லா இருக்கும். இந்த சோயா மோரில் புரோட்டீன்கள் அதிகம். இந்த சோயா மோரை பயன்படுத்தினால், கொழுப்பு சேராது. எந்த சீதோஷ்ண நிலையிலும் இந்த சோயா மோரை உணவில் பயன்படுத்தலாம். சளி பிடிக்காது. எலும்பு மஜ்ஜைகள் உறுதியாகும். உடல்ல கேன்சர் செல்கள் உருவாகாம ஆரம்பத்திலேயே தடுத்திரும். இப்படி சோயா மோரை பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும். இங்கு சாப்பிட வரும் கஸ்டமர்கள் சோயா மோரை விரும்பி சாப்பிடுறாங்க. பலர் சோயா மோர் பற்றிய ரெசிபியைக் கேட்டு குறிச்சுகிட்டுப் போறாங்க" என்றார் மகிழ்ச்சியாக.